Ad Widget

சமூகவலைத்தளங்கள் மீதான தடை: அரச நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு!

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையானது, இலங்கையின் அரச நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடைக் காலத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன ஒரு தினத்தில் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துவது குறித்த விவாதங்களை தொடர்ந்து ஃபேஸ்புக் பாவனை வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான மோதல்களை தொடர்ந்து, போலியான செய்திகளின் மூலம் பதற்றம் தூண்டப்படுவதை தடை செய்யும் வகையில் நாடளாவிய ரீதியில் அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts