யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு!!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று (03) ஆளுநர்...

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி!!

இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். மயிலிட்டி பகுதியில் நேற்றையதினம் (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதன்போது துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,...
Ad Widget

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகொந்தா குறிப்பிட்டார். இதுபோன்ற புனையப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க கூற்றுக்களைப்...

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை அரசியலாக்க வேண்டாம்!!

அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இந்திய மீனவர் விடயங்கள் பேசும் பொருளாக காணப்பட்டது. ஆனால் தமிழகம் செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து எதுவிதமான கலந்துரையாடும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தமிழகம் சென்று அங்கு இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்கின்றார் என...

இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு!

வட மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளத்தின் நீர்மட்டம் தற்போது...

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைத்து நிற்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக...

புலிகளின் தலைவரின் வீட்டை மீளமைக்க கோரிக்கை!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான தலைவர் பிரபாகரனின் சகோதரிக்கு அறிவுறுத்த வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானித்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு அண்மையில் நகர பிதா எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, தலைவர்...

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு!

நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது...

T20 உலகக் கிண்ணம் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!!

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் ஞாயிற்றுக்கிழமை (01) யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு அரங்கிலும், யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த...

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு!!

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை...

காற்று மாசுபாடு விவகாரம்; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!

யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீட்டு...

பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த காடாப்புலம் காணியானது இன்று புதன்கிழமை பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக...

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்த தீர்மானம்!

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்று (27) சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள்,...

நிபா வைரஸ் குறித்து வீண் அச்சம்கொள்ளத் தேவையில்லை!!

இந்தியாவில் பரவிவரும் நிபா வைரஸ் தொற்றால் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனச் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். இந்தியாவில் கேரள மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் அந்நாட்டினுள் நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து அதிக...

யாழில் இராணுவ வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் (27) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினறும் சட்டத்தரணியுமான செலஸ்ரினின் வேண்டுகோளின் பேரில் யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில்...

யாழ்.மாநகர சபைக்கும், ரொரன்டோ மாநகரத்துக்கும் இடையிலான நட்புணர்வு ஒப்பந்தத்தை மீள வலுப்படுத்த கோரிக்கை!!

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் திங்கட்கிழமை (26) வடக்கு மாகாண ஆளுநர்...

யாழ். சர்வதேச விமான நிலையத்தினரின் அவசர அறிவித்தல்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள...

வடக்கு கல்வியில் முறைகேடு? ஆசிரியர் சங்கம் போர்க்கொடி!

கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூல முறைப்பாடு ஒன்று அனுப்பி...

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்!!

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். அதற்கமைய, 01.கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) இல்லாத மருந்துகளை, வெளி மருந்தகங்களில் கொள்வனவு...
Loading posts...

All posts loaded

No more posts