அனலைதீவில் துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி மீட்பு

அனலைதீவு பகுதியில் நேற்றைய தினம் (07) துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்றைய தினம் துப்புரவு செய்துள்ளார். இதன்போது, மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த குறித்த கைக்குண்டையும் துப்பாக்கியையும் அவர் அவதானித்துள்ளார்.

இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஊர்காவற்துறை பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts