- Tuesday
- June 16th, 2026
யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் ஆறுகால்மடம் பொன்னையவீதி, கொக்குவில் பிரம்படி வீதி, ஆறுகால்மடம் புதுவீதி ஆகிய பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வாள்களுடன் புகுந்த குழுவினர், வீட்டை அடித்து நொருக்கி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டொன்றில் நிறுத்தி...
யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தோக்குப் பயணித்த நகரங்களுக்கு இடையிலான (இன்ரசிற்றி) தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர்...
அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இங்குள்ள மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதுடன், வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவர்கள் வீட்டு கூரைகள் மீது தாவி திரியும்போது மக்கள் அவல குரல் எழுப்பியதும், கூரையில்...
நாட்டின் பல்வேறு பாகங்களில் மதிய நேரத்தின்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று காலை 08.30 மணியுடன் , 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் வெப்பநிலை வழமையைவிட 4 பாகை செல்ஸியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இதேநேரம் நுவரெலியா, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வழமையை விடவும் 2 பாகை செல்ஸியஸினால் வெப்பநிலை அதிகரித்திருந்ததாக காலநிலை...
யாழ்ப்பாண வர்த்தக நிலையங்கள் மூடப்படும் நேரத்தில் வாள்களுடன் வரும் முகமூடிக் கொள்ளையர்களை கைது செய்யவேண்டும். அச்சம் காரணமாக வர்த்தகர்கள் இரவு 7 மணியுடன் கடையை மூடுகின்றனர். இது தொடர்பில் துரித நடவடிக்கை அவசியம். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரிடம், யாழ்ப்பாண வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாள்களாக...
சண்டிலிப்பாயில் நேற்று இரவு வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வீதியில் போவோர் வருவோரை மடக்கி, மிரட்டியது, முகத்தை மூடி துணிகட்டி வாள்களுடன் நின்றவாறு இந்தக் குழு அட்டகாசம் செய்தது. வீதியில் சென்ற வாகனங்களை இந்தக் குழு அடித்து நொருக்கியது. ஒருவருடைய மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றது. ‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’...
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் வட.மாகாண சபையினால் சுமார் ஆறு மில்லியன் ரூபா செலவில் நிமாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் தற்போது பயனற்றுக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அது கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. வட.மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ்...
விடுதலைப் புலிகளின் சமாதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மஹகரகம பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிசிர ஜயகொடி இதனை தெரிவித்தார். “முன்னாள் விடுதலை புலிகளின் குடும்பங்கள் மற்றும் விடுதலை புலிகளை நினைவுகூறும் தினங்களுக்கு நிதி வழங்கும்...
பாடசாலைகளில் தற்போது தின வரவிற்காக பயன்படுத்தப்படும் கைவிரல் அடையாள நடைமுறையினால் கடந்த ஆண்டு நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டமை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனால் மாற்று ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தில் தற்போது...
சிறுமிகள் சிலரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டு வழக்கின் ஆசிரியர் சந்தேகநபராவார். அவருடைய தரப்பினரே சாட்சிகளுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை வழங்கி அவற்றின் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாகவிருந்தால், சந்தேகநபர் வெளியில் வந்து சாட்சிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கமாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் உண்டு? ஆகவே சந்தேகநபருக்கு பிணை அனுமதி வழங்கப்படக்கூடாது” இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் முன்னிலையாக...
சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அண்மையில் எழுதுமட்டுவாழ் பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை நடாத்தினர். அவ்வேளையில் உசன் பகுதியில் உள்ள வர்த்தக...
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. 2017 ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்களுக்கான வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்நிலையில் தற்போது...
தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளிலுள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இரவு 11.30 முதல் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1 ஒரு மணிவரை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி டச் வீதியில் மடத்தடி பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் இரவு 11.30...
தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள தேசிய வாதத்தின் ஓர் அங்கமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கூட்டமைப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுவதாக இதன்போது குற்றம் சுமத்தியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 902 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 312 ஏக்கர் அரச நிலமும், 112 ஏக்கர் தனியார் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 318 ஏக்கர் அரச...
நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடையாளமாக வட மாகாணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 முதல் 14ஆம் திகதிவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு...
வீதி ஒழுங்கு விதிமுறைகளுக்கு மீறியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் போக்குவரத்துப் பொலிஸார் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவைகளில் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடவும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வோரும் தமது மோட்டார் சைக்கிள்களை...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை முன்னெடுக்கத் திட்டமிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில்...
வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது இதில் பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவ மனை கொண்டுசென்று சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து...
கல்லூரி தாயை மீட்டெடுக்க பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவனும் ஆதின சபையை சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண கல்லூரியில் நிர்வாக சீர்கேடுகள் , அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி பழைய மாணவர்கள் கல்லூரி முன்றலில் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து...
Loading posts...
All posts loaded
No more posts
