Ad Widget

கல்விசார் ஊழியர்களின் நாளைய போராட்டம் கைவிடப்பட்டது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை முன்னெடுக்கத் திட்டமிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று குற்றஞ்சாட்டி ஆசிரியர் சங்கம் உள்பட கல்விசார் தொழிற்சங்கங்கள் கடந்த 4ஆம் திகதி சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் வடக்கு – கிழக்கு உள்பட நாடுமுழுவதும் இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில் நாளை 26ஆம் திகதி மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கள் தயாராகி வந்தன.

கல்விசார் தொழிற்சங்கங்களின் இந்த முடிவால் பாடசாலைகளில் தற்போது இடம்பெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சைகள் பாதிப்படையும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.

கல்விசார் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதிக்கும் இடையே இன்று பேச்சுக்கள் இடம்பெற்றன.

இதன்போது கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் தொழிற்சங்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts