ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள்...

மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 500 ஆண்டுகள் பழமையானவையாம்!!

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட...
Ad Widget

தலைமறைவாகியிருந்த வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்....

ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய 65 வயதுடைய கண்தெரியாத முதியவர்!!!

25 வருடங்களாக ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய ஹம்காவை வசிப்பிடமாக கொண்ட 65 வயதுடைய கண்தெரியாத முதியவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்படும் போது வங்கி கணக்கில் 5 இலட்சம் ரூபாவும் வைத்திருந்துள்ளார். ஹம்பகா- கொழும்பு கேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் ரயில் பயணிகளிடம் பணத்தினை...

யாழ்,கிளிநொச்சி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்

வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 32 தொடக்கம் 41 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்றுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...

வடக்கிலுள்ள மிகுதிக் காணிகளையும் விடுவிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்

யாழ். பலாலியில் புதிதாக விடுவிக்கப்பட்ட நிலங்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். வடக்கிற்குவந்துள்ள அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக நேற்று (புதன்கிழமை) பலாலிக்கு சென்றார். அங்கு விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் பாடசாலைகளை பார்வையிட்ட அவர் யாழ்ப்பாண சமூகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் முகமாக மிகுதி...

ஜெனீவா செல்லும் குழுவில் ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் -ஜனாதிபதி

இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள அனைத்து போதைப்பொருட்களும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி அழிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கட்டுநாயக்கவில் வைத்து அவை அழிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர்கள் இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஊடாக அதிக போதைப்பொருள் பாவனைக்கும் வன்முறைகளுக்கும்...

மட்டுவில் தாக்குதல் சம்பவம் – மூவர் கைது

சாவகச்சேரி மட்டுவில் கிழக்கு பிரதேசத்திலுள்ள வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர், பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலையடுத்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்....

மானிப்பாயில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்!

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள்வெட்டுக்கும்பல் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக மானிப்பாய் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்கும்பல் ஒன்று வீட்டின் கதவுகள், யன்னல்கள், என்பவற்றை அடித்து சேதமாக்கியதுடன், வீட்டினுள் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது. அத்துடன்...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட பலவீனம் காணமாக மக்களின் உடலில் உஷ்ணம் மேலும் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதிகளவு நீர் அருந்துமாறு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இந்த காலநிலை மேலும் அதிகாரிக்க கூடும் என்பதனால் அதிக வெப்ப நிலை அதிகரிக்கும். வெளி இடங்களில்...

இந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிக்கு இடமளிக்கவேண்டாம் – விக்னேஸ்வரன்

இந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை காரணமாக வைத்து அங்கு...

யாழ். பல்கலையில் பகிடிவதை தொடர்கிறது – மாணவர் ஒருவர் படிப்பை இடைநிறுத்தினார்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததாலும், தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி...

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்திய அரசு அனுமதி!

வடமாகாணத்தின் அசமந்த போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர வட மாகாணத்திற்கு, மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களுக்கான விண்ணப்பங்களும், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களும்...

இராணுவ வெற்றியின் பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடம் பிரகடனம்

எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து எமது தாய்நாடு விடுவிக்கப்பட்ட இராணுவ வெற்றியின் பத்து வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆட்புல எல்லை மற்றும் இறைமையை பாதுகாப்பதற்காக உயிர்நீத்த, காணாமற்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவத்தினை செலுத்துவதற்கும் நினைவுகூருவதற்கும் ஒவ்வொரு வருடமும் இராணுவ நினைவு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு...

புதிய வரவு செலவு திட்டம்: வாகன விலைகளும் அதிகரிப்பு

2019ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவு திட்டத்தின் கீழ் வாகனங்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிசொகுசு வாகனங்களுக்கான உற்பத்தி வரி திருத்தியமைக்கப்படவுள்ளதுடன், சிறிய கார்களுக்கான வரி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, 1300 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கான உற்பத்தி வரியை 5 இலட்சம் ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 800 சிசி-க்கு...

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இதனை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அந்தவகையில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவைக்கு 5000 ரூபாயாலும் சாதரண சேவைக்கு 3000 ரூபாயாலும்...

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அமெரிக்க தூதுவர் – சம்பந்தன் பேச்சு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் கூறியுள்ளார். மேலும் குறித்த சந்திப்பின்போது சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்மையும் இல்லை தீமையும்! இல்லை!! ஆராய்ந்தே முடிவெடுப்போம் – சம்பந்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இரா.சம்பந்தன்...

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி வரவேற்கத்தக்கது – சுமந்திரன்

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் – அரசாங்கம்

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் மாதாந்தம் இந்த கொடுப்பனவு வழங்க...
Loading posts...

All posts loaded

No more posts