- Tuesday
- September 1st, 2026
இரண்டரை மாத ஆண் சிசு கிணற்றுக்குள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தாயார் மாறுபட்ட இரு வாக்குமூலங்களை வழங்கிய நிலையில் அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதனால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி துன்னாலை குடவத்தை...
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு...
அதிகாலையில் வீடு புகுந்தவர்கள் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இடியன் துவக்கால் இளைஞனின் கால் பகுதியில் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு மங்கை குடியிருப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார்...
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், “ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர்...
“நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும்...
சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கை இனத்துவேச பிரசாரமே காரணமாக அமைந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சஜித்தினுடைய தோல்விக்கு காரணம் நாங்கள் எடுத்த நிலைப்பாடு அல்ல. உண்மையில் சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கையிலே கிளறிவிடப்பட்ட இனத்துவேச பிரச்சாரமே காரணம். அது கூடுதலாக முஸ்லீம்களுக்கு எதிரான...
இரண்டரை மாதம் நிரம்பிய பாலகன் நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் துன்னாலையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான். இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல்...
கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளில் சிகிசை பெறுவதாகவும், இதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ரூபா பணம் தேவை...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 400 கிராம் பால்மா பக்கெற்றின் விலை 15 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெற்றின் விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் அதிகரித்திருந்தது....
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயே அத்துமீறி உள் நுழைந்ததாகப் பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்...
சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர் தாதியா்கள், ஊழியா்களை தாக்கி தளபாடங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் சந்தேகநபர்களை பொலிஸாாிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின்னர் மருந்து கட்ட...
நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர்...
கடவுசீட்டுக்கு தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் விவகாரத்தில் சட்டங்களின் பெயரால் தமிழர் பாரம்பரியங்களை சிதைக்கவேண்டாம் என மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சண்.குகவரதன் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது...
புதிய அரசாங்கம் உத்தரவின் பேரில் வற் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேச நிர்மாண வரியை நீக்கியுள்ளதன் சலுகையை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கிளிநொச்சியில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இந்து கல்லூரி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் மண்டபமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கிளிநொச்சியில்...
பரவிவரும் டெங்கு தொடர்பில் மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர முதல்வரினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கடந்த 10ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் உயர்திரு. என். வேதநாயகன் தலைமையில்...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதிவான் யூ.பி.ஆர். நெலும்தெனிய பேலியகொடை...
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் தெற்கு கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க நிலை நாட்டுக்கு அப்பால் நகர்ந்து வருவதனால் நாட்டில்...
காங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா வந்த தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று கடற்படையினர் தெரிவித்தனர். மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இளைஞனுடன் வந்தவர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 11 அமர்வுகளாக 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. இதன்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மருத்துவ...
Loading posts...
All posts loaded
No more posts
