- Thursday
- May 7th, 2026
ராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகியிருந்த நிலையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத வீடொன்றில் சந்தேகநபர், நண்பர்களுடன் இருந்தவேளை, அந்த வீட்டநேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ராணுவத்தினர் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு தருமபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்...
அமைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன் அமைச்சராக பதவியேற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வட மாகாண சபையில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விமல் வீரவன்ச, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பெயர்பலகையை மாற்றியமைத்தமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர்...
தம்பி தொடக்கிவிட்ட கூட்டு, தவறான தலைவர்களின் கைகளுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும்? கொள்கைகள் பறிபோவன. சுயநலம் தலைவிரித்தாடும் என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர் பூ. லஷ்மன் அல்லது மருத்துவ நிபுணர் சிவன் சுதன் போன்றவர்கள் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் கட்டாயம் அவர்களுடன் கலந்தாலோசிக்க...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. “மனிதராகச் செயற்பட்டால்தான் வாழமுடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அதிகரித்த வீதத்தில் அறவிடப்படும் ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் உணவகங்கள், மருத்தகங்கள் தவிர ஏனைய வியாபார நிலைய வர்த்தகர்கள் தமது வர்த்தக செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர். இதன் காரணமாக கிளிநொச்சி...
கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கட்சி ஒன்றினை சேர்ந்தவர் என்றும்...
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் இருந்து வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்ளும் போது அதற்கு தேவையான நாளை தெரிவுசெய்வதற்கு Online மூலம் விண்ணப்பிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு செத்சிரிபாய போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் போக்குவரத்து சேவை முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள...
மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணையகத்தளத்தின் முகவரி www.mahapola.lk என்பதாகும். இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று முதல் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில்...
பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்…… நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்….. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி…… பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு… பயிற்சியின் பின்னர்...
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான எந்தவொருக் கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 செப்டெம்பர் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தின்...
யாழ்ப்பாணம், பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு கழுத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவரே இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் பண்ணை கடற்கரைப்...
யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனம் வழங்கக்கூடாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் நேரில் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. 2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் கட்சி முடிவுகளை எடுப்பதா என கட்சியின்...
பொது மக்கள் மத்தியில் அமைதியைப் பேணும் பொருட்டு நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது....
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பயணிகள் போக்குவரத்து மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் 54 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பொறுப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வாரமளவில் இவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படவுள்ளதாகவும்...
உலகை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள ஒரு கெரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல் தடுப்பதற்கு இலங்கைக்கு வரும் பயணிகளை சோதனையிட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசேட ஸ்கேனர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் பரவிவரும் கெரோனா வைரஸ் இந்த தொற்றுக்கு உள்ளான பயணிகளை இனம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்படவுள்ளது...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை...
நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் இன்று சிறிய அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ...
இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் N.C. விதானகே இதனைத் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பாக வருடமொன்றுக்கு சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக காணி...
Loading posts...
All posts loaded
No more posts
