Ad Widget

அச்சுறுத்த ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ்!! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனை!!!

உலகை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள ஒரு கெரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல் தடுப்பதற்கு இலங்கைக்கு வரும் பயணிகளை சோதனையிட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசேட ஸ்கேனர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சீனாவில் பரவிவரும் கெரோனா வைரஸ் இந்த தொற்றுக்கு உள்ளான பயணிகளை இனம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

சீனாவுக்கு செல்வோர் முகமூடி அணியுமாறும், நெரிசலான இடங்களுக்கு செல்லவேண்டம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ’சார்ஸ்’ என்ற வைரஸ் பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த முடியாமலும், மருந்து கண்டுபிடிக்க முடியாமலும் விஞ்ஞானிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வைரஸ் பாதிப்பால் உலகம் முழுக்க 800 பேர் உயிரிழந்தனர். இதன் தொடக்கம் சீனாவில் தான் ஏற்பட்டது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதே சீனாவில் மிகக் கொடிய மற்றொரு வைரஸ் ஒன்று பரவி வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சீனாவில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சீன அரசு நாடியுள்ளது.

நேற்று (21) வெளியாகியுள்ள புதிய தகவல் படி சீனாவில் 291 பேருக்க தொற்று ஏற்பட்டுள்ளது.
Hubei Province: 270, Beijing: 5, Guangdong Province: 14 Shanghai: 2, அத்துடன் யப்பானில் ஒருவருக்கும் தாய்லாந்தில் இருவருக்கும் வடகொரியாவில் ஒருவருக்கும் கெரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோய்_அறிகுறி

இது மூச்சு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியது. சளி, இருமல் போன்றவை தான் அறிகுறிகள் ஆகும்.

குழந்தைகள், கர்ப்பினித்தாய்மார்கள், வயோதிபர்கள் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் சீனாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சால அறிவிக்கப்பட்டுள்ளது.

கைகளை அடிக்கடி சோப்புடன் கழுவவேண்டும் முகத்தைத் தொடுவதைக் தவிர்க்குமாறு தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? அதை தடுக்க மருந்து என்ன? இதன் தோற்றம் எப்படி இருக்கும்? என்று இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

Related Posts