- Thursday
- May 7th, 2026
இலகு ரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு தேவையான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளினூடாக வழங்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் இந்த மருத்துவ அறிக்கையினை வௌியிடக் கூடிய வகையில் அரச வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்துனால் உருவாக்கப்படும் மாதிரிக்கு அமைய இந்த சான்றிதழ் விநியோககிக்கப்படவுள்ளதாக...
பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலை நம்பி, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில இலைகளை அரைத்து குடித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கம்பஹா மொரகொட பகுதியில் இடம்பெற்றது. சாற்றை அருந்தியவர் உடனடியாக மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, சிகிச்சையளித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருமணமான 36 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் தற்போது...
கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் பெறும் நடைமுறை இரத்துச் செய்யப்படுவதாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வரும் பெப்ரவரி 10ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிராம சேவையாளரால் வழங்கப்படும் வதிவிடச் சான்றிதழ், நற்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள், கடிதங்களுக்கு அந்தப்...
கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கோரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை அவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரி சோதனை பின்னரே அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பில் தெரிவிக்க முடியும்...
தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் உழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது. இதற்காக அமைச்சரவை ஆவணம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தபால் சேவையை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுக்க முடியும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்...
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று(புதன்கிழமை) அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சிகளைப் பெறும் காலப்பகுதியில் 22,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவும் பட்டதாரிகளுக்கு...
சீனாவை மையமாகக் கொண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து, வட மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரான சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கு உள்ளானவர்களுக்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று...
வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 47 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் கடந்த 29.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வவுனியா நகருக்கு செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார்....
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கொடை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நிலையில், இவ்வாறு சந்தேகத்தின் பேரில் அனமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் அவர்களுக்கு அந்த தொற்று இருப்பது இதுவரை...
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாகக் கோரப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறியவருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களைப் பயன்படுத்தி துணைவேந்தர் பதவிக்கு முன்னைய பேரவைக் காலத்தில் கோரப்பட்ட விண்ணப்பத்தை வலுவற்றதாக்கி, புதிதாக விண்ணப்பங்களைக் கோருவதற்கான முன்மொழிவை...
இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் மட்டத்தில் இத் தேர்தல் நடைபெறும். 18 - 27 வயது வரையறைக்கு உட்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்தியவர்கள் இளைஞர் பாராளுமன்றத்துக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். வேட்புமனுக்களை...
தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்...
வடக்கு மாகாணத்தின் ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை பகுதியில் நடாத்தப்படும் இராணுவ சோதனை நடவடிக்கையினால் தினசாி அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா். பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பயணிகள் பேருந்துகளே முழுமையாக சோதனையிடப்பட்டு வருவதுடன் கடந்த ஒரு வாரகாலமாக போர்க் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள்...
தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ராஜகிரிய, கோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். எந்தவித...
இலங்கையின் சுதந்திர தினத்தை ஓட்டி 512 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் தீா்மானத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன், நாளைய தினம் இவா்கள் விடுதலை செய்யப்படவுள்ளனா். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படி ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த...
இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் தான்தோன்றித் தாவரம் பனை. இப்பெருமரம் தமிழ்மக்களின் பண்பாடு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியனவற்றில் உயிரோட்டமான பங்களிப்பை நல்கித் தமிழ்த்தேசியத்தின் மிடுக்கான அடையாளமாகத் திகழ்கின்றது. தமிழின் முகவரியாக விளங்குகின்ற இப்பெருவளத்தின் அபிவிருத்திக்கென இதனுடன் எவ்விதத்திலேனும் தொடர்புற்றிராத தென்னிலங்கைச் சிங்களவர் ஒருவரைப் புதிய அரசாங்கம் தலைவராக நியமனம் செய்திருக்கிறது. அங்கு தொட்டு, இங்கு தொட்டுக் கடைசியில்...
யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாய்த்தொல்லையை கட்டுப்படுத்துமாறு விவாதிக்கப்பட்ட நிலையில் சீனாவுக்கு கப்பல் மூலம் அனுப்பலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து மண்டபத்தில் சிரிப்பொலியுடன் சலசலப்பும் ஏற்பட்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது துறைசார்ந்த மீளாய்வு நடைபெற்றவேளை யாழ்.பல்கலைக்கழக...
கொரோனா வைரஸ் எந்தவொரு உணவு பொருட்கள் ஊடாகவும் பரவாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சளி உடலுக்குள் சென்று, தும்மல் அல்லது வேறு வழிகளில் நோயாளியின் தொற்று, வேறு ஒருவரின் உடலுக்குள் செல்வதன் காரணமாகவே...
பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இறைச்சி சாப்பிட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மகாதேவன் சிகேந்தினி (35) என்ற பெண்ணே உயிரிழந்தவாராவர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், கோண்டாவில் வடக்கு பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு உணவாக கோழி இறைச்சி மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
