- Wednesday
- May 6th, 2026
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோ (நெக்ஸ்ட்போட்ஸ்) இன்று நேற்றைய தினம் பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான பமுதிதா பிரேமச்சந்திராவினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ 200 நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. தொற்றுநோய்களின் போது பயன்படுத்துவதற்காக இந்த ரோபோவை மேலும் மேம்படுத்த அரசு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் கொத்தணிமுறையில் பரவுதல் அல்லது பரவாதிருத்தல் தொடர்பில் தற்போதைக்கு எதிர்வு கூறமுடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது : கடற்படையினரில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர்களது குடும்பத்தினர் , பிரதேசவாசிகள் எதிர்காலத்தில் தொற்றுக்குள்ளாகக்...
இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுய அபிமானி 2019ஆம் ஆண்டு திட்ட ஆய்வில் வடமாகாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இயங்கும், கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு கலாநிதி ஆறு.திருமுருகனால் நிறுவப்பட்ட இந்தப் பாடசாலை சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் மூன்று தடவை...
சாவகச்சேரி பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் மறவன்புலவில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர், பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையின் மறவன்புலவு வட்டார...
நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹு வெயிடம் தெரிவித்தார். “இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக...
இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுகூரல் நிகழ்வு யாழில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத் துறைக்காக உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005...
கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில் சமூக அமையம். தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி குமரவடிவேல் குருபரன் ஆகியோரினால் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிவிப்பில், “ஒரு பொது சுகாதார அபாயக் காலப்பகுதியில்...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு முதல்...
covid-19யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை, தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை, கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி, போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில்...
யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு இடம்பெற்றுள்ளது. கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாரம் இல்லாத குறித்த கூட்டத்தில்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை வரும் மே 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொருள்கள் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை...
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நேற்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. தினமும் அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்...
நுண்நிதக் கடன்கள் மற்றும் நிதி நிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடனுகளுக்கான தவணை கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு மீள பெற வேண்டாம் என அரசினால் மத்திய வங்கி ஊடாக...
“முருகனின் நினைவோடே அவரது தந்தை மரணித்துவிட்டார். நான் வாழப்போகும் சில நாட்களாவது எனது மகனோடு வாழ வேண்டும் என ஏங்குகிறேன்” என தமிழக சிறையில் வாடும் முருகனின் தாயார் தெரிவித்துள்ளார். இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஈழத் தமிழரான முருகனின் தந்தையார் நேற்று அதிகாலை சாவகச்சேரி வைத்திசாலையில் காலமானார். பளை...
யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இன்று ஊடரங்கு...
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்களுக்கு விடுப்பை முடித்து கடமைக்குத் திரும்பும் படையினரை தங்கவைத்து பரிசோதனைகளை முன்னெடுக்கும் வசதி கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இல்லை எனத் தெரிவித்து அங்கிருந்து படையினர் வெளியேறியுள்ளனர். எனினும் தனிமைப்படுத்தல் நிலையத்தை (இராணுவத்தால் கூறப்படும் போக்குவரத்து மையம்-Transit Centre) திருநெல்வேலி பாற்பண்மை பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்தின் புதிய...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமாக இருந்தாலும் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரனமாக இன்று இடம்பெற்றுள்ளது. யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...
நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள பொருளாதார நிலமைகளைக் கருத்திற்கொண்டு தங்க நகை அடகு முற்பணத்துக்கான அதிகூடிய மாத வட்டியாக ஒரு சதவீதத்தை இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது. இந்த புதிய வட்டிக் குறைப்புநேற்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவேண்டும் என்று அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளிடமும் இலங்கை மத்திய வங்கி...
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பெறுபேறுகள் பதிவேற்றப்படுகின்றன என்றும் பதிவேற்றியவுடன் முடிவுகளைப் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான...
Loading posts...
All posts loaded
No more posts
