115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி முதற் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை...

கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தத்தில் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக பாரியளவிலான நிலப்பரப்பு இழக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலக பிரிவின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு வீரக்கெட்டியவில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார். துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதனை மீளவும்...
Ad Widget

பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக்கவசம் அணிவது கட்டாயமானதா என அனில் ஜாசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே...

நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு – தெற்கு என்ற பேதம் இல்லை – பிரதமர்

நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தும் போதும் வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை  (2020.07.01) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்...

இந்தியாவில் இருந்து கடல்வழியாக நெடுந்தீவுக்குள் நுழைந்தவரால் யாழில் கொரோனா பரவும் அபாயம்!!

தமிழகத்திலிருந்து வேலணை பகுதியை சேர்ந்த ஒருவர் நெடுந்தீவு தெற்கு கடற்கரை வழியாக தீவுக்குள் நுழைந்த நிலையில், உடனடியாக செயற்பட்ட பாதுகாப்புதுறையினர் அவரை கைது செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். சிறிய தெப்பம் ஒன்றில் தமிழகத்திலிருந்து நெடுந்தீவுக்குள் நுழைந்த குறித்த நபர் வேலைணை 2ம் வட்டாரத்தை சேர்ந்த சுரேஸ்(வயது29) என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இருந்து...

சுமந்திரன் மற்றும் சிறிதரனின் கொடும்பாவிகள் எரிப்பு!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கொடும்பாவிகள் நேற்று மாலை யாழ் வடமராட்சியில் வைத்து சில இளைஞர்களால் எரியூட்டப்பட்டுள்ளன. இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன. சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னுதாரணமாக நடந்து கொண்ட சட்டத்தரணி மணிவண்ணனுக்கு மக்கள் பாராட்டு!!

பாடசாலை மதிலில் தனது இலக்கத்தையும் கட்சி சின்னத்தையும் கீறியதற்கு மனவருத்தம் தெரிவித்து மதிலுக்கு, புதிதாக சுவர் பூச்சு பூசி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன். தாவடி பகுதியில் உள்ள பாடசாலை மதிலில் வி. மணிவண்ணனின் பெயர் பெரிதளவில் வெள்ளை வர்ணத்தில் எழுதி, அருகில் கட்சி சின்னமும்,...

கொழும்பில் கொரோனா ; ஜிந்துப்பிட்டி வீதி முடக்கம்!!

கொழும்பு - 13 ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ்நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவில் இருந்து வருகைதந்த மாலுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பு , ஜந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது. இவர் கடந்த சில...

சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை!

காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால் கசூரினா கடற்கரை மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கடற்படையினருக்கு கொரோனோ தொற்று...

முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை!

பிரசார நடவடிக்கைகளுக்காக முகக்கவசங்களில் வேட்பாளர்களின் இலக்கங்கள்,பெயர்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வெளியிட முடியாது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நேற்றையதினம் (வியாழக்கிழமை) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவித்தல் அனைத்து பொலிஸ்...

மார்ச், ஏப்ரல், மே மாத மின் பட்டியல் தவறுகளை ஆராய்ந்து பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கத் தீர்மானம்!!

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார கட்டண பட்டியல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராயவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நான்கு பேர் கொண்ட குழுவை மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர நியமித்துள்ளார். கோவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்கு உத்தரவு...

சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறியதால் கரவெட்டியில் திருமண மண்டபத்துக்கு 14 நாள்கள் தடை

கோவிட் -19 நோய்த் தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கரவெட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் விழாக்கள் நடத்த 14 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துன்னாலையில் உள்ள மணி மண்டபம் ஒன்றே இவ்வாறு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த தடை கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் நேற்று ஜூலை முதலாம் இடம்பெற்ற திருமண நிகழ்வின்...

யாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து!!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற பிரதமர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார். அந்த சந்திப்பினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி...

தரம் 1,2 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 10இல் ஆரம்பம்!!

முதலாம், இரண்டாம் தரம்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துப் பாடசாலைகளும் கடந்த (ஜூன் 29) திங்கட்கிழமை மீளத் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 5,11 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் ஜூலை 6ஆம் திகதி...

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து விமலேஸ்வரி நீக்கம்.! – சுமந்திரன், சிறீதரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரும் கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கடந்த...

காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த

காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே பிரதமர் மஹிந்த...

புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பலர் சிறையில் இருக்கின்றனர் – ஹிருணிகா

எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் சிறைச்சாலைக்குள் உள்ளனர் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்று சிறைச்சாலைகளில் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் இருக்கிறார்கள். இவரகளின் சிலருக்கு வழக்கு கூட தொடரப்படவில்லை. அதேபோல், இராணுவத்தினரும் நீண்ட காலமாக சிறைகளில் இருக்கிறார்கள்....

தேர்தல் பிரசாரங்களில் எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி பணித்துள்ளார். இம்முறை...

கருணா அம்மானுக்கு அரச பொது மன்னிப்பு!! – மகிந்த ராஜபக்‌ஷ

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று தமிழ் செய்தியாசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் தவறு உள்ளது. அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பிரதமர்...

யாழ். மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக...
Loading posts...

All posts loaded

No more posts