- Tuesday
- May 5th, 2026
கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்க நேற்று (புதன்கிழமை) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர் வழிபாட்டு இடத்திற்கு...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், அந்தக் குற்றத்திலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார். கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுவித்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பூசா சிறைச்சாலையில் உள்ள மிகவும் ஆபத்தான கைதிகள் சிலர் ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உள்ள கொஸ்கொட தாரகவை விசாரணைக்கு உட்படுத்திய போது, வெளியான தகவல்கள்...
யாழ்ப்பாணத்தில் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்களே இவ்வாறு நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, “வாள் , கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இலங்கைத் தமிழரசுக் கட்சி பாரளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 தேர்தல் அறிக்கை வரலாற்றுப் பின்னணி அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான...
யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சி.சிறிதரனின் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரினாலும் தாக்கப்பட்ட பெண்ணொருவர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன சாரதி வேந்தன், உருத்திரபுர அமைப்பாளர் திலக்சன் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்...
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் (Smart Lamp Pole) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது. மனுதாரரின் மனுவில் உள்ள குறைபாடு, எழுத்தாணை மனுவுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பாக திருப்தியின்மை மற்றும் மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பகிரங்க விவாதத்தை நடத்த தான் தயாராக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஸ்ரீகாந்தா சவால்விட்டுள்ள நிலையில் பொதுவெளியில் நடுநிலையான நபரை...
கலாநிதி குருபரன் என்னிடமும் சட்ட ஆலோசனை கோரினார். அவருக்கு அதனை வழங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டு, சட்டத்தரணியாகவும் பணியாற்ற வேண்டுமென கோரும், கலாநிதி கு.குருபரன் விவகாரம் அண்மை நாட்களில் சூடு பிடித்திருந்தது. குருபரனிற்கு இழைக்கப்பட்டது அநீதி என ஒரு தரப்பும், ஒரு அலுவலக...
பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். தொற்றுநோய்...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார். அத்துடன், அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாநகர சபையில் இன்று (செவ்வாய்கிழமை)...
தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் பின்வரும் 5 கோரிக்கைகளை முன்வைத்து நிற்கின்றது. 1. தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தவறாமல் வாக்களிப்போம் என உறுதிபூணுவோம். எமது பிரதேசத்தில் இயங்கும் பொது அமைப்புக்கள் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவைக்கு பெரும்...
அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஒக்டோபர் 9ஆம் திகதி மூடப்பட்டு நவம்பர் 16ஆம் திகதிவரை மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், 11, 12 மற்றும் 13 தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் வகையில் பாடசாலைகள் இடம்பெறும். ஏனைய தரங்களுக்காக வரும் ஓகஸ்ட்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பின்னர் உச்சரிக்க வேண்டியதேவை மக்களுக்கு இருக்காது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்....
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு எனத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்,...
கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (17.07.2020) பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருக்கிறார். தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை காரணமாக...
யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 35 வழக்குகள் நீதிமன்றங்களில்...
பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சுகாதார அமைச்சு ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை பாடசாலைகளை மூடிவைத்திருக்குமாறு கல்வியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும்...
யாழ்.பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழில் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து , தமிழ் எழுதி வாங்கி சென்று இருந்தார். யாழ்.பிரதான தபாலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக காவல்துறையினரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை...
Loading posts...
All posts loaded
No more posts
