- Friday
- May 1st, 2026
பண்டிகை காலங்களில் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மூன்றாவது அலை தாக்காம் தோற்றம் பெறாத வகையில் அவதானத்துடன் செயற்படுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை எட்டாகப் பதிவாகியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 352 பேரின் மாதிரிகள் நேற்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு 8 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம்...
யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டதரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின் முன்னுதாரணமான செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மாநகர சபையால்...
யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர்...
யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணி நேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுகிறது. காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக விடயம் அறிந்த...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம்...
யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ...
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் வீதிகளில் கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த அறிவிப்பை விடுத்தார். இதேவேளை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார...
மூடப்பட்டிருந்த கடைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் இன்று திறக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ் நகர வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மூடப்பட்டிருந்த வர்த்தக...
நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகளை அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர, மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளன என கூறினார். ஆகவே முக்கவசம் அணிவதுமற்றும்...
யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது. இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது....
யுத்தத்தின் போது கைகால்களை இழந்த 64 முன்னாள் போராளிகளிற்கு செயற்கை கை, கால்களை இராணுவம் வழங்கவுள்ளது. இதில் 58 ஆண்களும் ஆறு பெண்களும் அடங்குவர். அவர்கள் தற்போது வடக்குப் பகுதிகளில் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார்கள். ஏப்ரல் 5 மற்றும் 6 திகதிகளில் அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல போர் மாவீரர்கள் நல மையத்தில் அவர்களின் அளவீடுகள்...
யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்று (7) காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் பேருந்துகள் வழக்கம் போல சேவைகளை ஆரம்பித்துள்ளன. யாழ் நகரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டன. இதன்படி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பயணிகள்...
கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறைத் தலைவர் சுவாமிநாதன் விமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிரதான பாடங்களில் ஒன்றாக மாணவர்கள் தெரிவு...
யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கோவிட்-19 நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை வியாழக்கிழமை தொடக்கம் திறக்க அனுமதிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் விடுத்துள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் உள்ள வர்த்தக நிலையங்கள்...
யாழ்ப்பாணம் நகரினைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெட்) வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன. 464 பேருக்கு முல்லேரியாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன....
யாழில் இருந்து வெள்ளை வேனில் வாள்களுடன் சென்ற குழுவொன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பிபில மற்றம் அம்பாறை பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 70 மற்றும் 47 வயதுகளையுடைய ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 588ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கடந்த 24...
Loading posts...
All posts loaded
No more posts
