காங்கேசன்துறை-வவுனியா இடையே ரயில் சேவை ஆரம்பம்

காங்கேசன்துறை – வவுனியா இடையே தினம் ஒரு தொடருந்து சேவை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து பயணித்த ஆரம்பித்த தொடருந்து வவுனியாவை காலை 8.07 மணிக்குச் சென்றடையும். அத்துடன், இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்று யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதான...

வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறார் சமன் பந்துலசேன!

வடமாகாண பிரதம செயலாளராக பதவியேற்பதை முன்னிட்டு சமன் பந்துலசேன வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் இன்று (26) காலை ஈடுபட்டார். வவுனியா மாவட்டத்தின் அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். வடமாகாண ஆளுனரின் சிபாரிசின் பின்னணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...
Ad Widget

கொரோனா தொற்றினால் மேலும் 45 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸினால் மேலும் 45 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் ஆண்கள் 23 பேரும் பெண்கள் 22 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 99ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஆயிரத்து...

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து GMOA எச்சரிக்கை!

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் முற்றாக தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மீள் பரிசீலிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா திரிபானது எதிர்வரும் மாதங்களில், நாட்டின் பிரதான வைரஸ் திரிபாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. அத்தோடு, பொதுமக்கள் ஒன்றுகூடும்...

இலங்கை மீண்டும் கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகர்கின்றது!!

இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மரணித்தும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அசேல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, ”நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றமையை...

கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்!!

கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் மனவருத்தமடைந்தேன். திறமையான தொழிலதிபராக இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வணிக வலையமைப்பை பராமரித்து வந்த ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் அதனூடாக இலட்சக்கணக்கான மக்களுக்கு உறுதுணையாக விளங்கினார். சிரச, சக்தி, MTV ஆகிய ஊடக வலையமைப்பின் உரிமையாளராக மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும்...

சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்!

சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரம் இராணுவத்தின் 4வது மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணி மற்றும் 5வது பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அக்ரி ஷ்ரெடர்...

வார இறுதி விடுமுறை நாள்களில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் திட்டமில்லை

வார இறுதி நாள்களில் நீண்ட விடுமுறை உள்ள போதிலும் நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த திட்டமும் இல்லை என்று கோவிட்- 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மாகாண பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே இன்னும் நடைமுறையில் உள்ளன என்று...

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் – கூட்டமைப்பு!

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உற்பட்டு, கடந்த...

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்

தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக...

வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு!! பிரதமர் மஹிந்த வருகை!!

நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜீலை 31 மற்றும் ஓகஸ்ட் 01 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள...

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது விளிம்பில் இல்லை -சுகாதார அமைச்சு

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதென என கூறுவதற்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏதும் இல்லை என இலங்கை...

யாழில் இராணுவச் சிப்பாய் தற்கொலை!!

யாழ்ப்பாணம் – நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இராணுவச் சிப்பாயின் சடலம் இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக...

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மலையகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும்,...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 115 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் மற்றொரு கிராமத்திலும் தொற்றாளார்கள் அடையாளம்!!

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராரத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீருவில் கிராமத்தில் நேற்று எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடி மற்றும் தீருவில் ஆகிய...

18 லிற்றர் எரிவாயு சிலிண்டருக்கான விலை நிர்ணயம்

எரிவாயு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய 18 லிற்றர் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,150 ரூபாவுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்வைத்த இத் திட்டத்திற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய எரிவாயு சிலிண்டர் 1,395 ரூபா விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 12.5 கிலோ உள்நாட்டு...

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் – சட்டத்தரணி சுகாஸ்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையைப் பொறுத்த வரை பயங்கர வாதத் தடைச் சட்டம்...

சினோபோர்ம் தடுப்பூசி கொரோனாக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் – உள்நாட்டு ஆய்வில் தகவல்

இலங்கையில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளமை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். 20 முதல் 39 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (98.9%) ஆகவும் 60 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (93.3%) குறைவாக இருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது....

பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்...
Loading posts...

All posts loaded

No more posts