Ad Widget

சினோபோர்ம் தடுப்பூசி கொரோனாக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் – உள்நாட்டு ஆய்வில் தகவல்

இலங்கையில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளமை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

20 முதல் 39 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (98.9%) ஆகவும் 60 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (93.3%) குறைவாக இருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இருப்பினும் ஆல்பா மாறுபட்டும் எதிராக குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியையே வெளிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

Related Posts