- Monday
- April 27th, 2026
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து...
யாழ்ப்பாணம் மாநகர் குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த...
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இணையவழியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ் கட்சிகள் இணைந்து ஜெனிவாவிற்கு கடிதமொன்றை அனுப்புவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேநேரம், முதற்கட்டமாக ஒருமித்த...
யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு...
ஓர் நேர்மையான தேசிய வாதியை மங்கள சமரவீரவின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார். அவரின் மறைவு குறித்து ந.ஸ்ரீகாந்தா...
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் ஜசரட்ன தெரிவித்தார். இதுவரை, இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கிராம உத்தியோகத்தர்,...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பு கடந்த 16ஆம் திகதி...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் தமக்கு தெரியாது...
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்படுட்டது . யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப்...
நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவார காலத்துக்கேனும் நாட்டை முடக்கி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தபாய செவி சாய்த்துள்ளார். கொவிட்-19 தடுப்பூ பணிக்குழுவின் கூட்டதிற்கு பின்னர், அது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நாட்டை முடக்குவது தொடர்பான...
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர்...
நாடுமுழுவதும் ஊரடங்கு விதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதமும், சுகாதாரத் துறை தவிர்ந்த அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதமும் மற்றும் சிற்றூழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும் நன்கொடையாக வழங்கவேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுதிய...
திங்கட்கிழமை முதல் வெதுப்பக உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதால் உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கான அரசின் முடிவைத் தொடர்ந்து வெதுப்பக உற்பத்திகளின் விலையை உயர்த்துவது நியாயமானது. பாண் மற்றும் பிற வெதுப்பக...
வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலைமை உணர்ந்து வர்த்தகர்கள், தங்களது வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத...
யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும் கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3 ஆயிரத்து 806 பேருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 793 பேர்,...
பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசின் பங்காளிக் கட்சிகள் 10 இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளன. குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டைப் முடக்காமல் கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மருத்துவமனைகளினால் தாங்கமுடியும் அளவிற்கு குறைக்க முடியாது என்று அவர்கள் நம்புவதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் 10 கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நமது...
Loading posts...
All posts loaded
No more posts
