- Saturday
- August 29th, 2026
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்Lள்ளது. இதற்கமைவாக 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள்...
எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய புதிய வழிகாட்டல்களுக்கு அமைய, திருமண மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே...
லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்பில் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு J/ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில்...
வரலாற்றின் முதல் தடவையாக யாழ்.மாநகரசபையின் அமர்வு, செங்கோலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம், யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது. நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண...
யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது. அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை,மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ள நிலையில், இன்றையதினம் மருதங்கேணி கடற்பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கி உள்ளது. கரையொதுங்கிய நான்கு சடலங்கள் தொடர்பில் இதுவரை...
மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த காணியை...
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள்...
தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடுகின்றனர். அவர்கள் இருவரது ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். உரும்பிராயின் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை...
யாழ்.மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 85 ரூபாய் எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர்...
புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டான ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மட்டுமே முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கூறினார். இந்த விடயம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், புதிய கொரோனா மாறுபாட்டின் அச்சம் காரணமாக முடக்கத்தை விதிக்க பரிந்துரைகளை வழங்க விரும்பவில்லை என கூறினார்....
பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கடந்த சில வாரங்களாக பொதுமக்களின் நடத்தை காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளதாக தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான...
யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். புனித அந்தோணியார் சிற்றாலயம் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால்...
மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு J/150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று (திங்கட்கிழமை) காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது. அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி...
450 கிராம் எடையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17 ரூபாயினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் நடவடிக்கை...
புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது. புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது போல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவர், கலாநிதி பத்மா...
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அம்பாறை- சாய்ந்தமருது பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவவொன்று பதிவாகி இருந்தது. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை நேற்றைய தினம்,...
யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும்...
புதிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை செய்யப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வரவில்லை என...
யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆதரவில் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு, பொன்னாடை போர்த்தி நினைவு...
Loading posts...
All posts loaded
No more posts
