- Thursday
- August 27th, 2026
பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தின் போதே மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் குறைந்துள்ள போதிலும் டீசலின் விலையை குறைக்க முடியாமைக்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட டீசலின் விலைகள் குறையாத காரணத்தினால் டீசல் விலையை குறைக்க முடியவில்லை என பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடருந்துகள், பேருந்துகள், தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ வாகனங்கள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இவ்வாறு...
தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நடத்தியது?மேற்கண்டவாறு ஜனநாயக போராளிகள் கட்சியின்...
திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தியாக திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 21 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த இளைஞனிடம் இருந்து 21 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார்...
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடதக்கது
தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம் எனவும் எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும்...
தொழில்முனைவோரின் கடன் தவணைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரச வங்கிகளின் தலைவர்களுக்கு இராஜாங்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அரச வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சகத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரச வங்கியின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவித்தல்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் என்ற 29 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம்...
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பலாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து...
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக...
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவ்வாறு...
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையப் போவதில்லை என அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பேரவையில்இணையாது என நாடாளுமன்றதிற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும் என்றும் அதன்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிக்கின்றார் சிறுமியின் தாயார் வழங்கிய...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். [caption id="attachment_115149" align="aligncenter" width="600"] gotha-wife[/caption] கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு...
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும்,...
பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. வலி. வடக்கு முன்கொடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த 30 வருடங்களாக வலி. வடக்குப் பகுதியில்...
ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts
