யாழில். 9 1/2 மணித்தியாலயங்கள் மின்தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 1/2 மணித்தியால மின்தடை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. (more…)

72 அடி ஆஞ்சநேயர் சிலை திறப்பு

இந்திய சிற்பக் கலைஞர் புருஷேத்மன் தலைமையிலான குழுவினரால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமைக்கப்ப்பட்ட சிலை நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 72 அடி உயரமான இந்த ஆஞ்சநேயர் சிலை, ஆலயக் குருக்கள் சுந்தரேஸ்வரக் குருக்களினால் திறந்துவைக்கப்பட்டது.
Ad Widget

திருமண வைபவத்திற்கு சென்றவர்களை இடித்து தள்ளியது பட்டாரக வாகனம்! 3 பேர் படுகாயம்

திருமண வைபவத்திற்கு சென்று கொண்டிருந்த மூச்சக்கர வண்டியை பட்டாரக வாகனம் ஒன்று இடித்து தள்ளியதில் மிகவும் மோசமான நிலையில் மூச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

இந்திய மீனவரின் அத்துமீறல் எமது வாழ்வாதாரத்தில் வீழ்ந்த பேரிடி:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவரின் அத்துமீறலானது எமது வாழ்வாதாரம் மீது பேரிடியாக வீழ்ந்துள்ளது. இந்த அத்துமீறலானது எமது கடல் வளங்களை தினமும் சுரண்டுவது மட்டுமல்லாமல் எமது கடற்றொழிலாளரின் ஜீவனோபாயத்தையே சீரழித்துள்ளது. இந்திய ரோலர்களின் அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

புனர்வாழ்வு பெற்றவர்களின் நலனைக் கவனிக்க யாழில் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து...

லலித் குகன் வழக்கு ஒத்திவைப்பு

கடத்தப்பட்டு காணமல் போனதாக கூறப்படும் லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)

பிரதான வீதிகளில் பாதுகாப்பு குறியீடு அமைக்கும் பணிகள் ஆரம்பமாகின

பிரதான வீதிகளில் பாதுகாப்புக் குறியீடுகள் மற்றும் பாதசாரிக் கடவைகள் என்பன அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (more…)

துரிதகதியில் அமைகிறது யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடம்

யாழ்.பொலிஸ் நிலைய புதிய கட்டடத்திற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.இந்த புதிய கட்டடமானது துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டு வருகின்றது. (more…)

அச்சுவேலி கொலை சம்பவம் இரண்டாம் நபருக்கு பிணை

அச்சுவேலியில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டாவது சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்றினால் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டார். (more…)

யாழ். குருநகர் பகுதியில் 10 ஆமைகள் மீட்பு

யாழ். குருநகர் கடற்கரைப்பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 10 ஆமைகளை யாழ். பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

மொழிப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் பொருட்டு அவசர இலக்கம் அறிமுகம்

மொழிப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் எந்தப் பாகத்திலும் மொழி தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் 1956 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாட்டினைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

புனர்வாழ்வு பெற்றோருக்காக பொருளாதார, சமூக, நலன்புரி இணைப்பு வேலைத்திட்டம்

இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டோரின் நலன் கருதி, 'புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு வேலைத்திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதாகி, 5 வருடங்களை சிறையில் கழித்தவர் நிரபராதி என்று நேற்று விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப் பட்டு யாழ்.மேல் நீதிமன்றினால் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். (more…)

நெடுந்தீவில் இளைஞன் மீது வாள் வெட்டு

நெடுந்தீவு பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டினை மேற்கொண்டதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கொக்குவில் பொற்பதி வீதியில் சித்த வைத்தியர் சடலமாக மீட்பு

கொக்குவில் பொற்பதி வீதியில் வசித்து வந்த சித்த வைத்தியர் நேற்று திங்கட்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதான துரைசாமி ஜெயரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

இராணுவ வீரர்கள் மீது கைக்குண்டு தாக்குதல்; இருவர் நிரபராதி என விடுதலை

இராணுவ வீரர்கள் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டு கைதுசெய்யப்பட்ட இருவர் நிரபராதி என யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. (more…)

யாழ். பல்கலையில் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் குறித்த கருத்துப்பட்டறை

பாக்கு நீரிநிணையில் இந்திய இலுவைப் படகுகளின் செயற்பாட்டினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்த கருத்துப்பட்டறை திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)

தனியார் பேருந்துடன் இராணுவத்தினரின் பேருந்து மோதியதில் மூவர் படுகாயம்

தனியார் பேருந்துடன் இராணுவத்தினரின் பேருந்து மோதியதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

துப்பாக்கி சூட்டில் இராணுவ வீராங்கனை காயம்

யாழ்ப்பாணம், அச்செழு இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவ வீராங்கனை ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை உயர்வு

யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.கடந்த பருவமழை காலத்தில் மரக்கறிச் செய்கையாளர்கள் மரக்கறிகளைப் பயிரிடுவதில் நாட்டம் குறைந்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts