- Wednesday
- July 23rd, 2025

வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளராக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். அச்சுதன் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் இன்று தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் (more…)

வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரின் ஜீப் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக சுன்னாகம் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர். (more…)

புன்னாலைக்கட்டுவன், வடக்குச்சந்தியில் உள்ள தேனீர் கடையொன்றின் மீது இளைஞர் குழு ஒன்று மது போதையில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக கடையில் பணிபுரியும் இருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சுழியில் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளளது. இதில் ஆழியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் துரைசிங்கம் (more…)

யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபரை இடமாற்ற வேண்டாம் என கோரி நாவாந்துறை பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் தொடர்பிலான கடிதம் ஓஸ்மானியா கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், (more…)

வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியே செயலாளர் சுமித் ஜெயக்கொடி உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது (more…)

நல்லூர் ஆலயச் சுற்றாடலில் படையினரால் காவலரண் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள், இராணுவத்தின் மீது சுமத்தி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு அடிப்படையான காரணகர்த்த நல்லூர் ஆலய நிர்வாகிகளே என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இவர்கள் படையினரை சந்தித்து தமது ஆலயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, படையினர் காவலரண்...

அநுராதபுர இரத்தவங்கியில் கடமையாற்றும் வைத்தியரும் உதயன் நாளிதழின் பத்தி எழுத்தாளருமான வைத்தியர் இரத்னசிங்கம் சிவசங்கர் கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்..கிளிநொச்சியில் புதிதாக இராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்த பெண்களின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (more…)

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்தார். (more…)

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணி வகுப்பு நிகழ்வு இன்று சனிக்கிழநைடைபெற்றது.கோப்பாய் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் ஏற்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா கலந்துகொண்டார். (more…)

மாதாந்தம் 50000 ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மாதாந்தம் 50000 முதல் 100000 ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். (more…)

சுற்றுலா விசாவில் இலங்கை வரும் இந்திய பயணிகள் யாழப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபடுவதால் யாழ்.வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார் (more…)

சண்டிலிப்பாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரைநகரில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் இந்தப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கடந்த டிசெம்பர் மாதம் 6ம் திகதி காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட (more…)

இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வைப் பெற்றுதர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மீதான தாக்குதல்களினால் வைத்தியர்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்கின்றதால் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியுமென்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம்நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் யாழின் பல பிரதேசங்களில் (more…)

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சுமித் ஜெயக்கொடியிடமும் வாய்முறைப்பாடு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts