ஆட்பதிவுத் திணைக்களத்தின் வடபிராந்திய காரியாலயம் வவுனியாவில்

வடமாகாணத்துக்கான சேவைகளை வழங்கவென ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது.நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்த காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது. (more…)

தலைகீழாக பறந்த தேசியக் கொடி

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு போட்டியின் போதே தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது. (more…)
Ad Widget

காங்கேசன்துறை துறைமுகத்தை ஆழமாக்கும் பணி ஆரம்பம்

காங்கேசன்துறை துறைமுகத்தை ஆழமாக்கும் பணி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆழமாக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று காங்கேசன்துறை முகத்திற்கு நேற்று வந்தடைந்துள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது. (more…)

வியாபார நிலையமாக மாறிய நினைவுத்தூபி

சித்திரைப் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்.குடா எங்கும் வியாபாரம் களைகட்டியிருந்தது.தென் இலங்கையில் இருந்து வந்த வியாபாரிகளால் யாழ் குடா எங்கும் வீதிகளில் கடைகள் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. (more…)

வடக்கு கடற்படை உயரதிகாரிக்கு எதிராக நாகதீப விஹாரையின் நவதகல பதுமதிஸ்ஸ தேரர் முறைப்பாடு

வடக்கில் கடமையாற்றிவரும் உயர் கடற்படை அதிகாரி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மதகுருமார், அரசாங்க உத்தியோகத்தர்கள், தீவக மக்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (more…)

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

வழமைக்கு மாறான முறையில் கடந்த மூன்று தினங்களாக ஏ9 வீதி யாழ். வளைவில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

காய்ச்சலினால் 6 மாதக் பெண் குழந்தை மரணம்!

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 6 மாதக் பெண் குழந்தையென்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரும் வழியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. (more…)

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 26 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திரரசா உத்தரவிட்டுள்ளார். (more…)

தென்னிலங்கை வியாபாரியை ஏமாற்றிய சுன்னாக வியாபாரி

2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

வேலணையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

வேலணை 06ம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.அதேயிடத்தைச் சேர்ந்த செல்வராசா அசந்தன் (வயது-29) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். (more…)

மோட்டார் வாகன பதிவுக் கட்டணம் அதிகரிப்பு!

மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகன பதிவு கட்டணத்தை அதிகரிக்க மாகாண ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். (more…)

2015 ம் ஆண்டு முதல் தரம் 6 – 10 வரையான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்

தரம் 6 முதல் 10 வரையிலான பாடத்திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)

தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

தொழிற் பயிற்சி அதிகார சபையில் தொழிற்பயிற்சி முடித்த 63 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

“ஆயுததாரிகளின் மறைவிடம் குறித்து தெரியாது ” -பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)

காரைநகரில் சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

காரைநகரில் சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றப்பட்டு 1/2 மணி நேரத்தில் உயிரிழந்த இளம் தாய்

யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார். (more…)

காணாமல்போனவர் வீடு திரும்பினார்

இளவாலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர், குடும்பப் பிரச்சினை காரணமாக ஒழிந்திருந்து விட்டு வீடு திரும்பியுள்ளதாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பிராந்திய இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை

வடமாகாணத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சிறுவர் பராமிரிப்பு நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர் தங்கவேல் உமா தெரிவித்துள்ளார். (more…)

வயல்களில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

வயல் காணிகளில் தனியார் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். (more…)

வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோரின் விபரங்களை ஜனாதிபதி செயலகத்தினால் சேகரிப்பு

வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் விபரங்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலக விசேட செயலணியால் திரட்டப்பட்டு வருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts