- Monday
- August 24th, 2026
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார். மகோற்சவ திருவிழாக்களில் கலந்துகொண்ட பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டைகள், பணப்பைகள், மணிக்கூடு, தேசிய...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மக்களின் நினைவேந்தலுக்காகச் சென்று வருகின்றது. இந்நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத்...
தியாகி திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி, ஆறு பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரினால்; கடந்த 18 ஆம் திகதி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவு...
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் ஒவ்வொரு நாளும் தொடர்சியாக காலை 9 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.இதன்போது மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். இதனையடுத்து நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் இடம்பெற்றது....
யாழில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை டெங்கு கட்டுப்பாட்டு வாரமாகப் பிரடனப்படுத்தியுள்தாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய்...
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அரச வங்கியில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திருட முயன்ற குற்றச்சாட்டில், கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் கரவிட்ட பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர். இந்த சார்ஜென்ட் மேலும் இரு உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து போலி...
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன், மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனமானது...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இத்தகவலை கல்வி அமைச்சர் நேற்று (19.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன...
தியாக தீபம் திலீபனை நினைவுகூறும் விதமாக நடத்தப்படும் பேரணியை தடை செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தினை மீறி செயற்படுவதாக குறிப்பிட்டு இந்த பேரணியை தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று...
கொழும்பின் பல பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் தடுக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்கிழமை) கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ்...
நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில்; ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தழிழ் சிங்கள மக்களிடையே...
யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகம் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு போலி முகவரால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொழும்பைச்...
பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கு விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடமக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த கலாசாரத்தை நாம் நிறுத்தியே...
பிரான்ஸின் ரியூனியன் தீவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த 07 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்கள் நேற்று (18.09.2023) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் பிரதேசங்களில் வசிப்பவர்கள், அவர்களில் 6 பேர் தமிழர்கள் மற்றும் மற்றைய நபர் சிங்களவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதிகள்...
யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுதினமும் வியாழக்கிழமையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி.தர்சன் அறிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும் என்றும் அரச வைத்திய...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது, பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவு பிறத்துள்ளது. குறித்த ஊர்திப் பவனி வவுனியாவிற்கு வந்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன்,...
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது இன்று (திங்கட்கிழமை) யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலமையில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆர்.கஜன் அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக...
திருகோணமலை சர்தாபுர பகுதியில் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனன் குடா பொலிஸாரினால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்லைப்படுத்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...
All posts loaded
No more posts
