டக்ளஸ், கருணா போன்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் – சுமந்திரன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களை சார்ந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட...

முஸ்லீம் குடும்பங்களுக்கு தொல்லை கொடுக்கிறது கூட்டமைப்பு – முஸ்லிம்கள் குற்றச்சாட்டு

காடழிப்பை ஜனாதிபதியால் கூட தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முல்லைத்தீவு, கொத்தம்பியாகும்பம் என்ற இடத்தில் காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
Ad Widget

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் கைது!

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது. பின்னர் 73 வயதான...

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

நாட்டில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தடுக்கபட்ட வேண்டும், துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராககூடாது போன்ற கோரிக்கைகளை முனவைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது....

‘சிறார்களின் ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைய வேண்டும்’ – கொழும்பில் சச்சின்

இலங்கையில் சிறார்கள் மத்தியில் சுத்தம்- சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் யுனிசெஃப் அமைப்பின் வேலைத்திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வந்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கருடன் இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனும் இந்தப் பணிக்காக கைகோர்த்துள்ளார். பள்ளிக்கூடங்களில் சிறார்களிடத்தில் சுத்தம்- சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை...

கோட்டபயவின் கீழ் மூன்று ஆயுதக் குழுக்கள் வெள்ளைவான் கடத்தலை மேற்கொண்டது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தமக்குக் கீழ் மூன்று ஆயுதக் குழுக்களை செயற்படுத்தி வெள்ளைவான் கடத்தலை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி மூன்று குழுக்களும் கடத்தல் தொடர்பான செயற்பாட்டினை பகுதி பகுதியாக திட்டமிட்டு மேற்கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று குழுக்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மானின்...

உதவி செய்தவர்களும் அரசியல் கைதிகளே – சிவஞானம்

விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே போராடினார்கள். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களும் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடங்குவார்கள் என்று, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே,...

காதலனுக்கு திருமணம் : காதலி முறைப்பாடு

18 வயது வந்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 3 வருடங்களாக தன்னுடன் பழகி தன்னை ஏமாற்றிய இளைஞன் வேறொரு யுவதியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, பாதிக்கப்பட்ட யுவதி, திங்கட்கிழமை (12) இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கீரிமலை சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் சில்லாலை பகுதியைச் சேர்ந்த இளைஞனும்...

ஒரு வித காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சங்கானை பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் தர்சினி (வயது 36) என்பவரே இவ்வாறு திங்கட்கிழமை (12) உயிரிழந்துள்ளார். 10 நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்....

ஊடகவியலாளர்களுக்கு நேர்முகப் பரீட்சை

தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிளுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்களை நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுமாறு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலாதிகச் செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான கடிதம் உரியவர்களுக்கு நேற்று(12) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நேர்முகப் பரீட்சை 19ஆம், 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக...

நல்லூர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான மேற்படி போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி,...

தமிழ் அரசியல் கைதிகள் 2வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தம்மை விரைவில் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு மெகஸின், அனுராதபுரம் உள்ளிட்ட பல சிறைச்சாலைகளிலும் கைதிகள் உணவை புறக்கணித்து உண்ணாவிரத்தில்...

இளம் குடும்பஸ்தரின் மீது மூவர் கொண்ட குழு தாக்குதல் : குற்றவாளியை பிடிப்பதில் பொலிஸார் அலட்சியம்

தொழில் போட்டி காரணமாக இளம் குடும்பஸ்தர் மீது மூவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையின் விபத்து அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாவடி ஐந்து வேம்படி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருந்தவச் செல்வன் அருண்றொஜீவ் (வயது-33) என்பவரே மேற்படி தாக்குதலில் படுகாயமடைந்து...

யாழ்.மறைமாவட்ட ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமனம்

யாழ்.மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் பி.ஞானப்பிரகாசம் பாப்பாண்டவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்த ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். யாழ்.மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகியவற்றின் அதிபராகக் கடமையாற்றியதுடன்...

மோடி கூறுவதை நடைமுறைப்படுத்தவும்: எமிலியாம்பிள்ளை

இந்திய மீனவர்கள், இலங்கை எல்லைக்குள் அத்துமீறாத வகையில், மீன் இருக்கும் கடற்பகுதியை செயற்கை கோள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த விடயத்தை உடன் அமுல்படுத்துமாறு யாழ்.மாவட்ட மீனவர் சங்க சம்மேளனங்களின் சமாசத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். 'மோடி அறிவித்த திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவதன் மூலம், எங்கள்...

இடமாற்றம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

கஸ்டப் பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (12) போராட்டம் மேற்கொண்டனர். 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் பெற்று கடமையாற்றிய இவர்கள், 5 வருடங்கள் என்ற கட்டாயக்...

மாணவிகளை புகைப்படம் எடுப்பதாக புகார்

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புகளில் கல்விக்கற்கும் மாணவிகளை பாடசாலைப் பணியாளர் ஒருவர், அலைபேசியில் மறைமுகமாக புகைப்படங்கள் எடுத்து வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரம் மற்றும் உயர்தரத்தில் கல்விக்கற்று...

கண்காணிப்புக்குழுவை சி.வி உருவாக்க வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஐ.நா பரிந்துரைகளுக்கமைய விசாரணை நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'போரினால்...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி உறவுகள் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேபோன்று, யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் உறவினர்களாலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பொதுமன்னிப்பு வழங்கி தம்மை உடனடியாக விடுதலை செய்ய...

ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியனின் எச்சரிக்கை!

மாவட்ட நீதிபதி அல்லது அரச அதிபர் தளத்தில் நின்று சட்டத்தைப் பயன்படுத்தி வன்செயலில் ஈடுபடும் கும்பலைக் கலைப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை வன்முறைகளில் அல்லது வன்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவினரை, சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸார் அல்லது படையினரின் உதவிகொண்டு கலைப்பதற்கு சட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு...
Loading posts...

All posts loaded

No more posts