- Monday
- August 18th, 2025

நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, நாளை மறுதினம் 9000 மெட்ரிக் தொன் பெட்ரோல் நாட்டை வந்தடையவுள்ளது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அண்மையில் வடமராட்சி கிழக்கு பொதுளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் மேலும் நால்வர் நேற்று(15) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். நேற்று(15) காலை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த நால்வரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து கைது செய்யப்பட்டனா். பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் கிளிநாச்சி...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை கண்ட ஏனைய மாணவர்கள் அவாின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த...

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலரின் விற்பனை கொள்முதல் விலை 300.51 ரூபாய்யாக பதிவாகியுள்ளது. இதேவேளை இதன் விற்பனை விலை ரூ.319.66. பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞனை மறித்துள்ளனர். இவ்வாறு மறித்த...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதால் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பறையநலாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தபோதே குறித்த...

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. சிறுதானிய உணவுகளான கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கு காட்சிப்...

யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவிகள் இருவரில் ஒருவர் யாழ்.கோட்டைப் பகுதியில் வைத்து பாடசாலை சீருடையுடன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மற்றைய மாணவி வெளிமாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த நிலையில் வெளிமாவட்டத்தில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு மாணவிகளில்...

நாட்டில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைய, 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுதொடர்பான வழக்கினை அவதானி;ப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தில் புலம்பெயர் அமைப்புகள்...

தம்மில் இருந்து மாறுபட்டு சிந்திப்பவர்களை துரோகிகளாகவோ அல்லது அரசாங்க அணியில் பயணிப்பவராகவோ அடையாளப்படுத்துகின்ற பண்பு ஏதோவொரு வழியில் எமது தமிழ் அரசியல்வாதிகளிடம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், மாறுபட்ட நிலைப்பாட்டாளர்களைத் துரோகிகளாக சித்தரிப்பது எமது தரப்பிலுள்ள பலவீனத்தையே காண்பிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) இடம் பெற்றது. கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சு வார்த்தையிலும்...

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (15) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.311.60 ரூபாவாகவும், விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் (Anopheles stephens) என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை மற்றும்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள...

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் கோஷ்டி மோதல்கள்/ போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார். யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி நேற்றைய...

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது. குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும்...

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில்,36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று முன்தினம் (13.06.2023) இரவு இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை உடைத்து வீட்டில் இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை...

All posts loaded
No more posts