- Thursday
- June 4th, 2026
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் வேலாயுதம் செல்வகாந்தன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர் விளையாட்டுக் கழகமொன்றின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இவ்விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக புலம்பெயர் நலன்விரும்பிகளால் ஒரு தொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் விளையாட்டுக்கழகத்தின்...
யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள்...
சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் நேற்று (07) யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத...
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானார் என பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில்...
சின்னஞ்சிறார்களான பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் குடும்பத்தலைவர் ஒருவர். அவர்கள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவத் துறையினரின் பெரும் போராட்டத்தின் பின் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...
சமுர்த்தி அமைச்சினால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையின இளைஞர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கும் செயலானது தமிழ் மக்களை மலினப்படுத்தும் செயலாகும் என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். இந்த நியமனம் குறித்து நேற்றயதினம் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ். இணுவில் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியினால் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி வரையிலான இணுவில் – மானிப்பாய் வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கொண்டல் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் வேம்பு மற்றும் இதர நிழல் தரும் மரங்களை எதிர்காலத்தில் நாட்ட அவர்கள் எண்ணியுள்ளனர். இந்த...
யாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்கிய தொழிலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. யாழ்.நகரை எழில் மிகு நகரமாக்கவோம் என்று சொல்லி ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்ததுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரின் தெருக்களை கூட்டுவதற்கு தென்னிலங்கை தனியார் சுத்திகரிப்பு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில்...
“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வார்த்தையை...
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு செல்வதற்கு 6 ரூபாய் 50 சதம் பயண சீட்டை கொடுத்தமை, பயணிகளுக்கு பயண சீட்டை வழங்காமை, கணக்கிற்கு அதிகமாகவும், குறைவாகவும் பயண சீட்டு பணங்களை வைத்திருந்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் மீள பணியில் அமர்த்த யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குறித்த...
முல்லைத்தீவு ஆண்டான் குளபகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான் குள வீதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இருவரே துப்பாக்கியை...
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும்,நிரந்தர நியமனம் கிடைக்காத மன விரக்தியில் நேற்று மாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் முல்லைத்தீவு மாடவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட எமது கல்லூரி அதிபர் தொடர்பில் கேட்காது கல்லூரிக்கு நீச்சல் தடாகம் அமைத்து தருமாறு கல்லூரி நிர்வாகம் கோரியது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக போராடத்தில் ஈடுபட்ட புனித பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை...
யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000...
யாழ். முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில்,முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.அங்கு அகழப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக்...
காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சரசாலை வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னப்பு கெங்காதரன் (வயது 61) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம்...
யாழ் நகரில் வாங்கிய சோற்றுப்பாசலினுள் புளுக்கள் ! : நடவடிக்கை எடுக்காது அலைக்களித்த சுகாதாரத்துறை !!
யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் கடந்த புதன்கிழமை...
வவுனியா - கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த விடுதியில் நேற்று முன்தினம் மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார்....
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனொருவன் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த இரு பெண்பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்ததால், அப்பெண்ணின் கணவனே இவ்வாறு வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்...
Loading posts...
All posts loaded
No more posts
