- Tuesday
- May 6th, 2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (வயது – 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். சிறுவன், கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர்...

அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 21 வயதாக நாகராசா நிதர்சன் என்பவர் உயிரிழந்திருந்தார்....

தாகம் தீர்க்க கடையொன்றில் உள்ளூர் மென்பானம் வாங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (22)மதியம் உணவருந்திய பின் அந்த மாணவன் யாழ்ப்பாணம் புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார். அத்துடன் அம்மென்பானத்தை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவைமாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார். இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில்...

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து...

என்னிடம் வரும் அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த தேவைகள், உறவுகள் சார்ந்த வேலைகளைப் பேசவே என்னிடம் வருகின்றார்கள். மாறாக வடக்கில் பாாிய பிரச்சினையாக மாறியுள்ள குடிநீா் பிரச்சினைக்கு தீா்வினை காண் பதற்கு வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் ஒரு திட்டத்தை கூட முன்வைக்கவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம்...

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதற்கு பாடசாலை மற்றும் ஆலய நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புக்கள் சம்மதக் கடிதங்கள் வழங்கியமை வேதனையளிப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வவுனியா மாவட்ட செலயகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். இது...

மானிப்பாயில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் மீது ஆவா குழுவிலிருந்து தண்டனைபெற்ற சிலர் சேஷ்டை விடுவதாக தகவல் வந்துள்ளது. தனியார் வகுப்புகளுக்கும், கோயில்களுக்கும் செல்லுகின்ற பெண்களிடம், அவர்கள் செல்லும்போது பின்னால் தட்டிவிட்டு ஓட்டம்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றால் ஆவா குழு என தண்டனை பெற்ற உறுப்பினர்களே இவ்வாறு சேஷ்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில்...

வவுனியா - பெரிமடு பகுதியில் வைத்து சிறுவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து குறித்த சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா - நெடுங்கேணி - பெரியமடு பகுதியில் வைத்து கடந்த 6 ஆம் திகதி 8 வயதுடைய...

25 வருடங்களாக ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய ஹம்காவை வசிப்பிடமாக கொண்ட 65 வயதுடைய கண்தெரியாத முதியவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்படும் போது வங்கி கணக்கில் 5 இலட்சம் ரூபாவும் வைத்திருந்துள்ளார். ஹம்பகா- கொழும்பு கேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் ரயில் பயணிகளிடம் பணத்தினை...

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததாலும், தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி...

வடக்கில் சிங்கள சிற்றூழியர்கள் நியமனம் தொடர்கிறது. நான்கு மாவட்ட செயலகங்களில் 7 சிங்களவர்கள் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னனர், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்தது. இதன்போது அலரி மாளிகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள்- ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்புக்கள் நடைபெற்றன. இதன்போது, வடக்கில் சிங்கள ஊழியர்கள் நியமிக்கப்பட...

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார். வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு...

காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனைக்கு வைத்திருந்த ஹோட்டல் முகாமையாளருக்கு நீதிவானால் 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டுள்ள குடிதண்ணீர்ப் போத்தல்களை அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை மதிப்புறுத்தும் நிகழ்வு யாழ்ப்பாண நகர் ஆசீர்வாதம் வீதியிலுள்ள பிரபல்யமான விடுதி மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றது. வங்கி ஒன்றால் நடத்தப்பட்ட...

இலங்கை நாடாளுமன்றத்தில் 2018 ஆண்டில் வாயே திறக்காமல் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர். இவர்களின் பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கணிப்பிடும் மந்திரி இணையத்தளம் (Manthri.lk) வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு, அவர்கள் விவாதங்களில் கலந்துகொள்வது உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகள் குறித்தோ அல்லது...

தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக பாடசாலை மாணவன் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , முறைப் பாட்டை மீளப் பெற்றாலே உயர்தர தர பரீட்சை அனுமதிக்க விண்ணப்பிக்க அனுமதிப்போம் என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள்...

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரது உடலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார். ரயில் சாரதி திடீரன ரயிலின் வேகத்தை குறைத்து...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவரது செயலாளர்களில் ஒருவரின் அலைபேசி திருட்டுப் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற போதே அவரின் கைப்பையிலிருந்த அலைபேசி திருடப்பட்டுள்ளது. 55 ஆயிரம் ரூபா பெறுமதியான அதிதிறன் அலைபேசி...

நாளை (14) உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வொன்றை கொழும்பு பல்கலைகழக சட்டபீட மாணவர்களும், சில பொது அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. காணாமல் போன காதல் (Missing Lovers Day) என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வடக்கு கிழக்கிலுள்ள காணாமல்...

வவுனியா பொலிசார் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நான்கு மாத கற்பிணித்தாயார் ஒருவர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய 27வயதுடைய ஊழியர் ஒருவர் அவ்வியாபார நிலையத்தின் உரிமையாளரின் 19 வயதுடைய மகளை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்...

All posts loaded
No more posts