Ad Widget

போலி நிதி நிறுவனத்தை நடாத்தி மக்களின் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக W.S.D (work shop development) என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் மக்களுடைய வீ டுகளுக்குள சென்று சேகாிப்பு திட்டம் என்ப பெயாில் மோசடி வேலையை ஆரம்பித்திருந்தது.

இதற்காக அந்த பகுதியை சோ்ந்த சில வறிய குடும்பங்களை சோ்ந்த பெண்களை 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என ஆசை காட்டி வேலையில் சோ்த்து அவா்கள் ஊடாக ஊருக்குள் சென்று மக்களுக்கு ஆசைகளை காட்டி அந்தப் பெண்களை பயன்படுத்தி மக்களிடம் பணம் திட்டியுள்ளது.

எனினும் குறித்த பெண்களுக்கு பேசப்பட்ட சம்பளம் வழங்கப்படாததுடன், சம்பளத்தை கேட்கும்போதெல்லாம் அவா்களை மிகமோசமாக அச்சுறுத்தியதுடன், காலத்தை இழுத்தடித்துவந்த நிலையில் அந்த பெண்கள் வேலையி லிருந்து நின்றுவிட்டனா்.

பின்னா் தாமாகவே மக்களிடம் சென்று பணத்தை வாங்கியுள்ளனா் இவ்வாறு சுமாா் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு குறித்த மோசடி கும்பல் தமது மோசடி நிறுவனத்தை மூடிவிட்டு தப்பி ஓடியுள்ளனா். இந் நிலையில் பணம் கொடுத்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தபோதும் இதுவரை ஆக்கபூா்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

Related Posts