முன்னணியினர் 11 பேரின் தனிமைப்படுத்தல் கட்டளையை மீளப்பெற்றது நீதிமன்றம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு...

யாழ்.பல்கலை. முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் உறவுகளுக்கு நினைவேந்தல்

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத்...
Ad Widget

யாழில் குணமடைந்து திரும்பியவர்களுக்கு கொரோனா அறிகுறி!! -மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்

யாழில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதால் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி மீளவும் பரிசோதனை செயப்பட உள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6...

பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ். பல்கலைக்கழக பண்பாட்டு வாயிலில் தீபங்கள் ஏற்றி நினைவேந்தல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் ஏற்றப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது. அதனை அறிந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு...

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் படுகாயம்!!

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த...

சிறுமிகள் இருவருக்கு பாலியல் துன்புறுத்தல், சித்திரவதை!!; மூவரைத் தேடுகிறது பொலிஸ்!!

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும்...

நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்காக அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை!!

யாழ்.மாவட்டத்தில் இப்போதும் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயத்திற்குள்ளேயே இருக்கின்றது. நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் நோய் தொற்றுக்குள்ளவர்கள் எமது மாவட்டத்திற்குள் நுழைய வாய்ப்புக்கள் உள்ளது. மக்கள் விழிப்பாக இருப்பது நல்லது. மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற...

இலங்கையில் ஒரேநாளில் 26 பேருக்குத் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவ நேற்யைதினம் பிற்பகலுக்கு முன்னர் 21 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மாலையில் மேலும் ஐவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மொத்த தொற்றாளர்கள் 889 பேரில் 366 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் சுற்று அச்சுறுத்தல் காணப்படுகிறது – அனில் ஜாசிங்க

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்கள் குறித்த அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க சமூக தாக்கமொன்றை உருவாக்காத வகையில் சுகாதார அதிகாரிகள் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார...

தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்!!

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில...

சுமந்திரனின் கருத்தை வன்மையான கண்டிக்கின்றேன் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்தை வன்மையான கண்டிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தது ஆயுதப்போராட்டம் என குறிப்பிட்ட அவர் அயுதம்...

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8...

மகளைக் காதலித்த இளைஞனை பொலிஸாரை வைத்து தாக்கிய தந்தை

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர். சண்டிலிப்பாய் இரட்டைப்புலவு வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சிவில் உடையில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அட்டகாசத்தில்...

உடுவில் கொள்ளை; பொதுமக்களால் பிடித்துக் கொடுத்த சந்தேக நபரை விடுவித்த சுன்னாகம் பொலிஸார்

உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 6ஆம் திகதி (கொள்ளை இடம்பெற்று...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூலிகை மருந்து முல்லைத்தீவில் தயாரிப்பு- அங்கீகாரம்பெற நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் கடந்த வியாழக்கிழமை அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார். கூட்டுக் குளிசை(கப்சூல்) வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த உற்பத்தியானது 100 வீதம் மூலிகைத் தயாரிப்பாகும். இந்நிலையில், முயற்சியாளரின்...

மக்களே எம்மைச்சுற்றி அச்சுறுத்தல் உள்ளது ! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ! கொரோனா பரவாது என்ற சான்றிதழை வழங்க முடியாது – தொற்றுநோய் தடுப்பு பிரிவு

அடுத்த வாரம் தொடக்கம் ஊரடங்கு தளர்க்கப்படுவதால் நிலைமைகள் வழமைக்கு திரும்பிவிட்டதாக மக்கள் நினைத்துவிட வேண்டாம். கொவிட் 19 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகிறோமே தவிர நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழை ஒருபோதும் வழங்க முடியாது என்கிறார் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர. எம்மை சுற்றி வைரஸ் அச்சுறுத்தல்...

பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்- யாழ்.பல்கலை மருத்துவ பீடாதிபதி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து தடையின்றி முன்னெடுப்பதற்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “எல்லாருக்கும் தெரியும் கடந்த மாதம் 2ஆம் திகதியில் இருந்து யாழ். மருத்துவ...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 800ஐக் கடந்துள்ளது. இதேவேளை, இதுவரை 232 பேர் குணமடைந்துள்ள நிலையில்...

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா – மருத்துவர் சத்தியமூர்த்தி

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் க. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (06-05-2020) தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையின் ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்....

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளைப் பரப்ப சிலர் முயற்சி- வைத்தியர் சத்தியமூர்த்தி

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக் காரணம் ஆய்வுகூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன எனவும் அவர்...
Loading posts...

All posts loaded

No more posts