- Saturday
- September 5th, 2026
தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஆகவே பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என சுட்டிக்காட்டினார். மேலும், டொலர்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 977 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 645,037ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 20,128 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.”இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை (பெப்.22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த...
நாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேபோல ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்...
சுழற்சி முறையில் இன்றைய தினமும் (வியாழக்கிழமை) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. ஏனைய...
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூவில் உள்ள வீடொன்றில் வசித்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) என்ற வயோதிபப் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை...
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு கூறியது. அதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய...
பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின்...
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதை மாற்றியமைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அதற்கமைய, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இலகுபடுத்தும்...
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 5.30 மணி வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின்...
நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருக்கு தட்டுப்பாடு...
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் நோயாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்விற்கான அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர்...
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தபோதும் விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிக்கவுள்ளதாக மின்சார சபையின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். அதேநேரம், மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றிபெற வேண்டும் எனவும் இன்று...
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன. இதன்போதே, விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். நேற்றையதினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது....
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 22 பேரும் பெண்கள் 13 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 656ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை...
தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி...
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் இதுவரை கொரோன தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 18 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 23 பேர் நேற்று...
Loading posts...
All posts loaded
No more posts
