தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய...

எனது கருத்தை கேட்டிருந்தால் விடுதலைப்புலிகளின் தலைவரை இழந்திருக்க மாட்டோம்: டக்ளஸ்

"நான் 87ம் ஆண்டு சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரன் அடங்கலாக இவ்வளவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது" என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாணங்களிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்தரப்புக்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான முயற்சிக்கு மத்திய...
Ad Widget

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை!!

தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்படப் போகும் உணவுத் தட்டுப்பாட்டுக்குத்...

இலங்கையில் 66 சதவீதமானோர் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளனர்!!

உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 66 சதவீதமானோர் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் விளைவாகப் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் தோற்றம்பெற்றுள்ளன. அந்தவகையில் உணவுப்பாதுகாப்புத் தொடர்பில் உலக உணவுத்திட்டமும் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைந்து கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ச்சியான ஆய்வினை...

எரிவாயுவை ஏற்றிய இறுதி கப்பல் இன்று நாட்டிற்கு!!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிவாயுவை ஏற்றிய இறுதி கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. எவ்வாறிருப்பினும் இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை...

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை – சுற்றறிக்கை இன்று வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு வாராந்தம் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய...

எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமரின் அறிவிப்பு!

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். எனினும் அந்தக் கப்பல் மூலம் கொண்டுவரப்படும் எரிபொருளை, மின்சாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க...

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கம்!!

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. எவ்வாறெனினும் இவ்வாறு தடை நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை....

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 44.3 சதவீதத்தால் வீழ்ச்சி!!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. யூரோவுக்கு 40.7 சதவீதமும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக 39.8 சதவீதமும் ஜப்பானிய யெனுக்கு எதிராக 35.1 சதவீதமும் மற்றும் ஆஸ்திரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவீதமும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த...

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று விடுமுறை!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அரச...

அரிசி வியாபாரிகளுக்கு யாழ்.மாவட்டச் செயலர் கடும் எச்சரிக்கை!!

யாழ்.மாவட்டத்தில் அரிசிக்கான நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும்...

மின்சார விநியோகம் – வைத்தியசாலை சேவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 இன் கீழான அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் இரண்டாவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசாங்க கூட்டுத்தாபனம்,...

காலம் தாழ்த்தாது பாராளுமன்றைக் கலைப்பதே சிறந்தது – சுமந்திரன்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இதனால் அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் பாராளுமன்றம் அதற்கான முறைமையை மீறியுள்ளது. இதனால் பாராளுமன்றத்தை காலம் தாழ்த்தாது கலைப்பதே சிறந்தது. இவற்றைச் செய்வதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை நாடு இழக்க நேரிடுகிறது என...

யாழிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. நேற்றையதினம் (7) இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர...

யாழ்.போதனா வைத்தியசாலை நிலைமை மோசமடைவதால் அச்சத்தில் வைத்தியர்கள்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மோசமான நிலையில், காணப்படுவதாக வைத்திய நிபுணர் க.காண்டீபன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாது கடும் நெருக்கடியில் வைத்தியர்கள் கையறுநிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளமையினால் சிகிச்சைகளுக்கு தேவையான பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது....

இலங்கையில் நடக்கும் கொலைகளின் பின்னணி – வெளியான அதிர்சித் தகவல்!!

சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் 7 பேர் மர்மநபர்களால் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாதாள உலகத் தலைவர்களின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்...

அடுத்த 3 வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக அமையும் – பிரதமர்

நாட்டில் அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தோற்றுப்போன ஜனாதிபதியாக என்னால் போக முடியாது- எனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்வேன் -ஜனாதிபதி

ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் தனது ஆட்சிக்காலத்தின் எஞ்சிய இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்யப்போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எனினும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இலங்கை தசாப்தகாலங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. எனக்கு ஐந்து வருடத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது நான் மீண்டும்...

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு உத்தேசம்!

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார். கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபை ஊழியர்களின்...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு இந்தியாவின் அட்சயபாத்திர உதவிகள்!!

யாழ் போதனா வைத்தியசாலை இந்திய தூதரகம் ஊடாக கோரியதன்படி இந்திய அரசு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடை உதவியாக வழங்கியுள்ளது. இந்த மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று கையளித்தார்.
Loading posts...

All posts loaded

No more posts