2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள்

2016ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி...

யாழ் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர்...
Ad Widget

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலிடம்

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் சிறந்த மாகாணமாக சபரகமுவ மாகாணமும், சிறந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும்...

விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் அதிக புள்ளிகள்!

பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியிலாவது பங்குபற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக உள்ளடக்கப்படுவதோடு ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டிலேனும் பங்குபற்றி...

பணம் கேட்டால் எம்மிடம் சொல்லுங்கள்: ஆசிரியர் சங்கம்

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைக்க தீர்மானம்

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பிரதான பாடசாலைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் காரணமாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் சேர்வதற்கற்கான வாய்ப்பு கிடைக்கும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்...

விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த கலைமாணிக் கற்கை நெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த. (உயர்தர) பரீட்சை - 2013 அல்லது அதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்து இருப்பதுடன் பொதுஅறிவுப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 30...

இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தினால் நடாத்தப்படும் இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் இரண்டாம் மொழி சித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள், மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலையில்...

மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கப்படும்

பின்தங்கிய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கு, பாதணிகளை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அடுத்த 5 வருடங்களுக்குள், கல்வித் திட்டங்களில் மாற்றஞ்செய்யப்படும். அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும், இரு பாடசாலைகள் வீதம், சகல வசதிகளுடனும் கூடிய பிரசித்த பாடசாலை போன்று அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்....

உயர்தர பரீட்சையின் மீள்திருத்த விண்ணப்பம் பெப். 05 வரை

2015 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, முடிவுகளில் திருப்தியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 2500 மாணவர்கள் இணைப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைகழகங்களுக்கு இம்முறை 2000 தொடக்கம் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 2,000 வரையான மாணவர்கள் தொழிநுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழிநுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை முடிவு! யாழ். இந்துக் கல்லூரியில் 29 பேருக்கு 3ஏ!

இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 29 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அதன் மூலம் இம்முறை யாழ்மாவட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னணி வகிக்கின்றது. இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின்...

க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை

015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்சை பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார். நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்­தி­னையும் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பி­வைப்­ப­தோடு தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­களின் பெறு­பே­றுகள் அனைத்­தி­னையும் அவர்­களின்...

எதிர்வரும் 3ஆம் திகதியே க.பொ.த(உ/ த) பெறுபேறுகள் வெளியாகும்!

இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த(உ/த) பெறுபேறுகள் , அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். முன்னர் இன்று பெறுபேறுகள் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் நாளை!

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான் இறுதி நாள் நாளை (28) என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவுறுத்தல் ஏற்கனவே கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், விஞ்ஙானம், ஆரம்பக்கல்வி , சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம், அரபு, இஸ்லாம், இந்துசமயம், கிறிஸ்தவம், நடனம், விசேட கல்வி, தமிழ்,...

தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆக மட்டுப்படுத்துவது அநீதி!

அரச பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பொன்றுக்கு 35ஆக மட்டுப்படுத்தியிருப்பது நியாயமற்றது எனவும், அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் அனுமதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டதால் எஞ்சியுள்ள அரச பாடசாலைகளில் அனுமதி கோரும் மாணவர்கள் இந்த 35 மாணவர்கள் கட்டுப்பாட்டால் தமது...

உயர்தரப் பெறுபேறுகள் இம் மாத இறுதியில்…!

2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வௌியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 31ம் திகதி குறித்த பெறுபேறுகள் வௌியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள வசதிகள்!

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு தேசிய அதி வேக இணையத்தள வேலைத்திட்டம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்துதல் ஆணைக்குழு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்தே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போது சில பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள 128 Kbps...

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுறேுகள் இம்மதம் 31ம் திகதிக்கு முன்னர் வௌியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இம்மாதம் 28ம் திகதி...

மாணவர்கள் மீது தாக்குதல்; அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு

தனது அலைபேசியை திருடியதாகக் கூறி, 6ஆம் தர மாணவர்கள் மீது 9ஆம் தர மாணவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஸ்கந்தபுரத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலை அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts