- Friday
- November 14th, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்தரவகுப்பு பாடசாலை ஒன்றில் மாணவர்களும் மாணவிகளுமாகச் சேர்ந்து பாலியல் லேகியம் சாப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் அவர்கள் போதை ஏறி தமக்குள் சண்டையிட்டதன் காரணமாக 4 மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் குறித்த மாணவர்கள் சீருடையுடனேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை வைத்தியசாலையில் ஆசிரியர் ஒருவரே அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள்...
யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி துரிதமடைகிறது. வடக்கு கிழக்கில் மீள்கட்டுமானங்கள் சிறப்பாக நடக்கிறதென அரசு சொல்லித்திரிந்தாலும், யதார்த்தமென்னவோ வேறாகத்தான் இருக்கிறது. யுத்தத்தால் சிதைவடைந்த பகுதி மக்களின் வாழ்க்கையும் சிதைவடைந்துதான் கிடக்கிறது. அரசின் எந்த புனரமைப்பு திட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு உதவவில்லையென்பதே யதார்த்தம். யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலொன்றான முல்லைத்தீவில் நடக்கும் இந்த அதிர்ச்சி சம்பவங்கள் அபிவிருத்தி...
எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியை ஒருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. பிரத்தியோக வகுப்பு நடத்திய ஆசிரியையே இம்மாணவனை தாக்கியுள்ளார். காத்தான்குடியிலுள்ள மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் (வயது 10) எனும் மாணவனே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LED மின்குமிழ்களைப் பயன்படுத்தி வாழைத்தண்டில் உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே இக்கண்டு பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, அதனை செவ்வனே நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சரும், கல்வி இராஜாங்க அமைச்சரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு தமிழ் பிரிவிற்கு சேவையாற்ற கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர்...
காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் கனிஷ்ட வித்தியாலயம், 26 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சொந்த இடத்தில், இன்று வியாழக்கிழமை (02) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. கடந்த கால யுத்தத்தின் போது, யாழ். மாவட்டத்தினை இராணுவத்தினர் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளபட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம்...
2017ம் ஆண்டுக்காக அரசாங்க பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்காக மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்பங்களையும் மேலதிகத் தகவல்களையும் http://www.moe.gov.lk என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்காக காலஎல்லை ஜூன் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண கல்வி வளர்ச்சியானது போர்க் காலத்தில் வீழ்ச்சியடையாது காணப்பட்டிருந்தது. எனினும் போருக்கு பிந்திய ஏழாண்டுகளில் கல்வி வளர்ச்சியானது பாரியளவில் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வலிகாம வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று(26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய...
இம்முறை (2016ம் ஆண்டுக்கான) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கால எல்லை எதிர்வரும் (ஜூன்) 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த வருடம்...
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத்...
அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் தொடக்கம் ஒன்லைன் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தபால் மூலம் விண்ணப்பிப்பதனால் ஏற்படும் நேர தாமதத்தை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அறிவகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிலையங்களினூடாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும் என்றும்...
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இதன் பிரகாரம் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர்...
சர்வதேச புகைப்பிடித்தலுக்கெதிரான தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சு மற்றும் புகையிலை போதைப்பொருள் தொடர்பான தேசிய அதிகார சபை என்பன கூட்டாக இணைந்து பாடசாலை மாணவர்களிடையில் கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளன. இப்போட்டியில், ஆரம்ப பிரிவைச் சேர்ந்த 3ஆம், 4ஆம் தர மாணவர்களிடையே 'புகைபிடிக்காத எனது அப்பா எமது சொத்தாகும்' என்னும் தலைப்பிலும், கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த 6ஆம்...
பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார். இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார். பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை...
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர். இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின்...
Loading posts...
All posts loaded
No more posts
