மயான பிரச்சினை காரணமாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்கள்!!

புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர்...

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அம்மாணவர்களிடம் இருந்து,...
Ad Widget

முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். மாவட்டப் பிராந்தியக் காரியாலயத்தில் நேற்று (15) முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட...

தென்மராட்சி கல்வி வலயத்தின் வர்த்தகத் துறைக் கண்காட்சி

தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் 'தென்னவன்' வர்த்தகத் துறைக் கண்காட்சி இம்முறை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2017) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மாணவர்களிடையே சுயதொழில் மீதான நாட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் உற்பத்திகளின் சந்தைப்படுத்தலை...

அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை!! ஆயரின் கருத்­துக்­களை வன்மையாகக் கண்டிக்கின்றேன் : ஆர்.விக்­னேஸ்­வ­ரன்

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என்று யாழ். ஆயர் கூறி­யி­ருப்­பது ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்டு என்று நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார் புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன். ஆய­ரின் கருத்­தைத் தான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­தார். புல­னாய்­வுப் பிரி­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே பேரா­சி­ரி­யர் சிறி சற்­கு­ண­ரா­ஜா­வுக்கு துணை­வேந்­தர் பத­வியை அரச தலை­வர் மைத்திரி­பால...

யாழில் வடக்கு சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி

வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், பருவநிலை மாற்றங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்று மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் பறவைகள் வலசைப்...

கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனம்

கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எந்த வித சட்ட திட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1 ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த அதிபரை 1...

இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கை ; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஊவா மாகாணத்தில் நிலவும் க.பொ.த உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேவேளை, ஊவா மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். ஊவா மாகாணத்தில் நிலவும்...

மாணவியிடம் காதலை தெரிவித்தார் ஆசிரியர்!: பாடசாலை கல்வி செயற்பாடுகள் பாதிப்பு!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த, மாணவி இந்த விவகாரம் தொடர்பில் தன்னுடைய உறவினர்களிடம்...

முதலாம் ஆண்டு ஆசிரியை நடத்தும் அறுநூறு மாணவர்களை கொண்ட 1சி பாடசாலை

கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் என பெற்றோரும் கல்விச் சமூகமும்...

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 31ம் திகதியுடன் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நிறைவடையும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை தருவிக்க நடவடிக்கை

மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. மேலும் எங்களிடமும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே இதற்கு ஒரு தீர்வாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு தற்பொழுது இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...

கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை

கடும் வெப்பநிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை குறைப்பது மற்றும் மாணவர்கள் அதிகமாக தண்ணீர்...

அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகும்

நாடாளாவிய ரீதியில் உள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தவணைக்கான விடுமுறை கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாடசாலை சுற்றுச்...

சா/த சிறந்த பெறுபேறு: 25 கல்வி வலயங்களுக்குள் வடக்கு வலயம் இல்லை

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள வலஸ்முல்ல கல்வி வலயம் 84.70 சதவீதத்தை பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தை 82.79 சதவீதம் பெற்று கண்டி கல்விவலயமும், 79.74 சதவீதத்தை பெற்று மூன்றாமிடத்தை மாத்தறை மாவட்டத்தில் உள்ள முலட்டியன கல்வி வலயமும் தனதாக்கிக் கொண்டுள்ளது. வெளியான...

கல்வியமைச்சில் தகவல் அறியும் நிலையம் திறப்பு

விசாரியுங்கள் அறிந்துகொள்ளுங்கள் – அது உங்களது உரிமையாகும்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் கல்வி அமைச்சில் தகவல் அறியும் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்திற்கான இணையதளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து நேற்று (புதன்கிழமை) வைபவ...

பல்கலைக்கழக Z புள்ளிகளை அடுத்தமாத நடுப்பகுதியில் வெளியிட நடவடிக்கை

Z புள்ளிகளை அடுத்த மாதநடுப்பகுதியில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் 2016/2017 கல்வியாண்டுகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறுப்பிட்டார். இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 29 ஆயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் , எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மாணவர்களை இணைத்துக்...

மருத்துவ பீடத்துக்கு அனுமதி பெற உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு அவசியம்

அரச மருத்துவ பல்கலைக்கழகம் அல்லது தனியார் மருத்துவ கல்லூரி என்பவற்றுக்கு ஒரு மாணவன் பிரவேசிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விஞ்ஞான துறையில் 2 ஏ, சித்திகளையும், 1 பீ. சித்தியையும் பெற்றிருக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது. மருத்துவ பீடமொன்று பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் அடங்கிய அறிக்கையில்...

பகடிவதை செய்த மாணவர்களுக்கு மாகாபொல புலமைப் பரிசில், விடுதி வசதிகள் இல்லை!!

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள்,...

அரசாங்க பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான 2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை , முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைவதுடன் இரணடாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை...
Loading posts...

All posts loaded

No more posts