- Friday
- December 19th, 2025
போட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைக் கண்டறிந்து உரிய நேரத்தில் அணைக்கத்தவறுவார்களாயின் இதுவே பின்னாளில் எந்தக் குறுக்குவழியில் சென்றேனும் எந்தச் சதியைச் செய்தேனும் தான் விரும்பிய இலக்கை அல்லது பதவியை அடைவதற்கு அவர்களைத் தூண்டுகிறது என்று தமிழ்த்தேசியப்...
போட்டிமிக்க உலகத்திற்கு முகம் கொடுக்கும் வகையிலும், சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு இசிபத்தான கல்லூரியில் இடம்பெற்ற, முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,...
யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து...
ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. அண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்....
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே மோதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில்...
இலங்கையில் தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு இலவச நூல்களை வழங்குதல் மற்றும் இலங்கை, இந்திய, மலேசிய கல்வி அமைச்சுக்களின் ஊடாக ஆசிரியர் பரிமாற்றங்களை செய்து ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய செயற்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இலங்கை கல்வி...
பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்பட இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். கா.பொ.த சாதாரண தர மற்றும் கா.பொ.தர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு...
இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது. கொழும்பில் 51 பரீட்சை மத்திய நிலையங்களிலும், யாழ்ப்பாணத்தில் 6 பரீட்சை மத்திய நிலையங்களிலும் இந்த பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...
இவ்வருடத்தின் முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீள திறப்படுகின்றன. க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்படும் 58 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பமாவதோடு, குறித்த 58 பாடசாலைகளும்...
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் இவ்வாறு பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை பெறுபேறுகள் கொழும்பு பிரதேச பாடசாலைகளுக்கு முற்பகல் 10 மணியளவில் அனுப்பி...
வடமாகாணத்திலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வருடத்திலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது. வடமாகாணத்தின் உறுப்பினர்கள் பலர் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கந்தையாவை சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமாகாணத்தின் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் உறுப்பினர்...
புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூட்டமைப்பில் அங்கம்...
மருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று அரசாங்கம் தீரமானித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை,...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு அனுலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் போது ஒன்பது பாடங்கள் தற்போது கட்டாய...
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டையை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி விஷேட ஒருநாள் சேவை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள் வருவது கட்டாயம் அல்ல என்றும், அந்த மாணவர்களின் உறவு முறையை...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய நேற்று ஆரம்பமானது. இவ் வேலைத்திட்டம் இன்றும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு...
இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்வுள்ளனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிக்காட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதற்கான வர்தத்மானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர கல்வி கற்கை...
இலங்கையில் உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தலின்படி வெளியிடப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலின் மூலமே இது தெரியவந்துள்ளது. குறித்த தரவரிசைப் பட்டியலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 156ஆவது இடத்தில் காணப்படுகிறது. தரவரிசையில் 124ஆவது இடத்திலுள்ள டாக்கா பல்கலைக்கழகத்தைவிட பின்தங்கிய நிலையிலேயே கொழும்பு...
2016/17ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும் மாணவர்களை பதிவு செய்யும் பணி தற்போது இடம்பெறுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் .14 பல்கலைக்கழகங்கள், மூன்று பீடங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் 109 பாடநெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். சாதாரண அனுமதிக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 29...
பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு சகல அரச பாடசாலைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்தாயிரம் பாடசாலைகளில் 5 ஆயிரத்து 774 பாடசாலைகளில் இந்த விவசாய உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய மேலதிக காணிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வருமானம் தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு...
Loading posts...
All posts loaded
No more posts
