- Tuesday
- September 15th, 2026
ஆபத்தான முறையிலும் கவனக்குறைவாகவும் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி, கிராம சேவகருக்கு காயத்தை ஏற்படுத்தினார் என்று குற்றச்சாட்டுக்கு இலக்கான இராணுவ வீரருக்கு 9ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், விபத்தில் பாதிக்கப்பட்ட கிராம சேவகருக்கு 1 இலட்சம் ரூபாயை, நட்டஈடாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதியன்று,...
ஹெரோய்ன் கொள்வனவு செய்வதற்காக, தனது சிறுநீரகத்தை 500,000 ரூபாய்க்கு விற்பனை செய்த போதைக்கு அடிமையான நபரொருவரை, 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன், காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி, தன்கெதர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், தனது சிறுநீரகத்தை விற்பனைச் செய்த பின்னர், கொழும்புக்குச் சென்றுள்ளதாகவும்...
புங்குடுதீவு மாணவியான வித்யாவின் படுகொலைக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை, விடுவிக்குமாறு ஆலோசனை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைதுசெய்வதற்கான ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.முடிவுற்ற விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி...
துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் மற்றும் வாள்வெட்டில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத்தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது. துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகி அண்ணன், தம்பி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கமலேஸ்வரன் (வயது33),...
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் வீடொன்றின் மேல் ஏறி நின்ற நிலையில் அயல் விட்டார் இதனை பார்த்து வீட்டாருக்கு கூறியுள்ளனர். இதனையடுத்து அயலில் உள்ளவர்களும் சேர்ந்து சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர்....
நெடுந்தீவு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 இலங்கை மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்களிடமிருந்து 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டடுள்ளதாகவும் காரைநகர் மற்றும் வேலணை பகுதியைச் சேர்ந்வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை, இந்திய மீனவர்கள் நால்வரைக் கைதுசெய்துள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டிணம் பகுதியிலிருந்து விசைப் படகொன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர்...
யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ”ஆவா கெங்ஸ்டர்” உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனும், ஆசிரியரும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் இரு வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நவம்பர் 2 ஆம் திகதி...
ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்....
சந்தேகத்திற்கிடமான முறையில் யாழ் நகரில் சுற்றித்திரிந்த இரண்டு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பகுதியில் உள்ளக வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடகம் ஒன்றின் பயிற்சிக்காக குறித்த வாள்கள் இரண்டையும் வைத்திருந்ததாக சந்தேகநபர்கள்...
நாவலர் வீதியில் இடம்பெற்ற திருட்டு CCTV பதிவுகள் வெளியாகியுள்ளது. சைக்கிளில் வந்தவர்களே அதை செய்திருப்பதாக கருதப்படுகின்றது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை, சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களான, கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். இதேவேளை “இது தொடர்பான...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளை வெட்டியுள்ளனர். கடை ஒன்றில் கொள்ளையிட்டவர்களே...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம்...
யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் குற்றப்புலனாய்வுப்பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்திர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்கள் பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...
2011ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தால், திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஏழு பேரின் விளக்கமறியலை நீடிக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவர் மன்றில் முன்னிலையாக நிலையில் குறித்த நபருக்கு எதிராக மேல்...
யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்குப் பிணை கிடையாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், செவ்வாய்க்கிழமை (18) கூறினார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிணை மனு, செவ்வாய்க்கிழமை (18) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது....
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரொருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, முன்னாள் இராணுவ லெப்டினன், சுட்டுக்கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபரின் குடும்பத்தினருக்கு, இரண்டு மில்லியன் ரூபாயை, நட்டஈடாக வழங்கினார். பருத்தித்துறை இராணுவ முகாமில் 1998ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபர், கைவிலங்கிட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
Loading posts...
All posts loaded
No more posts
