மாணவிகளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த பாடசாலை அதிபர் கைது

வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (04.01) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் கடந்த மாதம் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை...

சினிமா பாணியில் இளம் பெண் கடத்தல்!!! காவல்துறையினர் அசமந்தம்!!

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு விடுவித்தனர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர்...
Ad Widget

நீதவான் உத்தரவை ஏற்று அழைத்துச் சென்ற சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைத்தார் பெண் சட்டத்தரணி!

யாழ். பருத்தித்துறையில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பருத்தித்துறை நீதவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். இதன்படி தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குறித்த சந்தேகநபரை பெண் சட்டத்தரணி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம்...

அடாவடியில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம், கொக்குவில் காந்திஜி சனச சமூகப் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார். “சந்தேநபர்கள் நால்வருக்கு எந்தத் தொடர்புமில்லை. இருவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பவர்கள்....

இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை தனது வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணி!!!

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணியால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை உள்ளதால் அவரைக் கைது செய்ய முற்பட்டதால் பெண் சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் பருத்தித்துறை நீதிமன்ற மன்ற வளாகத்துக்கும் வெளியேயும் இந்தப் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு...

தப்பியோடிய ஆயுததாரியை தேடுவதற்கு பெருமளவு இராணுவம் குவிப்பு!!

வவுனியா வடக்கின் புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் தலைமறைவான நபரைத் தேடுவதற்கு பெருமளவு இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதூர் நாகதம்பிரான் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்றிரவு ஆயதங்களுடன் நபர் ஒருவர் செல்வதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபரைக் கைது செய்யும் நோக்குடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் சிவில் உடையில் மறைந்திருந்தனர்....

யாழ்.வைத்தியசாலையில் நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. அதனால் வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு...

சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில்...

பொலிஸின் சித்திரவதையால் சந்தேகநபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. தனக்கு...

வட்டுக்கோட்டையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் சுட்டிக்காட்டினர். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. “வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து அதே பகுதியைச்...

யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் இடைநீக்கம்!

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த...

பளை பகுதியில் குழு மோதல் -இருவர் கைது

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராகச் சென்ற இருவரை பளை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். பளை பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று வாள்களுடன் செல்வதாக, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த...

யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் பண்டங்களை கொண்டுவந்தவர் கைது!

யாழ் நோக்கி கொண்டு வரப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன. போதை கலக்கப்பட்ட...

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக தவராசா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

சிங்களத்தில் தண்டப்பத்திரம்(தடகொல) எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,...

மூதாட்டியை தாக்கிக் கொள்ளை

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று (19) அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி, அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை...

கொள்ளை, வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகி 11 பேருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மாற்றப்படவுள்ள வளாகத்துக்கும் கடந்த வாரம் பெற்றோல்...

ஆவாக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து ​வேன் உட்பட வாள்களும் பொலிஸா​ரால் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை (18) 3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்துக் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 பேரில் இரண்டு பேர் ஆவா குழுவில் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும்...

வட்டுக்கோட்டையில் சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி சிக்கினார்!

வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வட்டுக்கோட்டை கிழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என வீட்டின் குடும்பத்தலைவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

யாழ்.வைத்திய சாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்!

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து , இதய துடிப்பு காட்டியுடன் (டேடஸ் கோப்) இரு பெண்கள்...

வவுனியாவில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : வர்த்தகர்கள் தப்பியோட்டம்

வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே இரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இவர்களின் நடவடிக்கையின் அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை வர்த்தகர்கள் மூடிவிட்டு சென்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக 8.30 மணிக்கு தமிழ் மொழி மூல...
Loading posts...

All posts loaded

No more posts