பூநகரி பிரதேசத்தில் 38 பேர் தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர்!!!

கிளிநொச்சி- பூநகரி பிரதேசத்தில் இடம்பெற்ற கண் பரிசோதனையின் போது, 38 பேர் முன்வந்து இலங்கை கண்தான அமைப்புக்கு தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர். இராணுவத்தின் 66 படைப்பிரிவின் ஏற்பாட்டில், பூநகரி கிராஞ்சி பாடசாலையில் இடம்பெற்ற கண் பரிசோதனை நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 398 பேருக்கு கண் பரிசோதனை இடம்பெற்றது. மருத்துவர் வைத்திய கலாநிதி அஜந்த அபேயவர்தன, இதன்...

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய சம்பவத்துக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை!!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் இராணுவம் தொடர்புபடவில்லை என இராணுவச் பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இராணுவ சீருடையின்றிய சிலர், ஊடகவியலாளரை...
Ad Widget

கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது: அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து...

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என அறிவிக்கும் பெயர்ப் பலகை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும்...

இராணுவம் அரசியலில் ஈடுபடக்கூடாது: முல்லைத்தீவில் இராணுவத் தளபதி!

தனிப்பட்ட நோக்கங்களுக்காக இராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில் இராணுவ பிரிவினரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது இராணுவ வீரர்களின் கடமை எனவும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில்...

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் அகற்றப்பட்டுள்ளது . இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தை யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தங்களின் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள்...

பாரிய புனரமைப்பின் பின்னர் பாசனத்துக்காக இரணைமடுக்குளம் திறப்பு

இரணைமடுக்குளத்தில் கடந்த இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த பாரிய புனரமைப்புப் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், காலபோகச் செய்கைக்காக இரணைமடுக்குளம் நேற்று திங்கட்கிழமை (20.11.2017) திறந்து விடப்பட்டுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலும் வட்டக்கச்சி ஒற்றைக்கைப்பிள்ளையார் ஆலயத்திலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழ்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான...

இரணைமடு காணிகள் அளவிடப்படுவதன் நோக்கம் என்ன?: மக்கள் கேள்வி

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பிலுள்ள கிளிநொச்சி இரணைமடு பகுதி காணிகள் அளவிடப்படுவதன் நோக்கம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளர். குறித்த காணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அளவிடப்பட்டு வருகின்றன. இக்காணிகளில் பொதுமக்களது காணிகளும் உள்ளடங்குகின்ற நிலையிலேயே அவர்கள் இவ்வாறு வினவியுள்ளனர். விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பண்ணைக்காணியே இவ்வாறு நில...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வாய்தர்க்கம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இணைத் தலைவர்களான ரிசாட் பதூர்தீன், காதர்மஸ்தான், வடக்கு முதல்வர் சி.விவிக்கினேஸ்வரன் ஆகியோர் இல்லாத நிலையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது. எனினும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண அமைச்சர்களான க.சிவநேசன், ஞா.குணசீலன், அனந்தி சசிதரன்...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் வடக்கில் பல துயிலுமில்லங்களில் விளக்கேற்றப்பட்டன. அதேபோல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யபட்டு வருவதை அவதானிக்க...

மேல் நீதிமன்றத்துக்கு எழிலனின் ஆட்கொணர்வு மனு தொடர்பான அறிக்கை!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு...

இரணைமடுவில் எந்தவொரு முகாமும் அகற்றப்படவில்லை: ராணுவப்பேச்சாளர்

இரணைமடு பிரதேசத்தில் இருந்து எந்தவொரு ராணுவமுகாமும் அகற்றப்படவில்லை என்று ராணுவப்பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவப்பேச்சாளர் இதனை கூறியுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு அமைய இரணைமடு பகுதியில் இருந்து ராணுவ முகாம் ஒன்று அகற்றப்பட்டதா? என...

யானைகளின் அட்டகாசத்தினால் முல்லைத்தீவு மக்கள் பாதிப்பு!!

யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து வருகின்றது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகள், வயல் நிலங்களை சேதப்படுத்துவதால், மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு...

இரணைமடு குளத்திற்கருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும்...

கிளிநொச்சி சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்ற கோரிக்கை!

கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக பயனாளிகள் பூநகரி சமுர்த்தி வங்கிக்கு வருகைத் தந்துள்ளனர். அதன்போது, அவர்களை சில மணிநேரம்...

கிளிநொச்சியில் வைத்தியர் இல்லாததால் உயிர் பறிபோனது

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி 4ஆம் கட்டையைச் சேர்ந்த சந்திரலோகராசலிங்கம் நிர்மலா (வயது-55) என்ற குறித்த பெண், நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான அவரை அவரது நண்பர் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது, அங்கு வைத்தியர் இருக்கவில்லை. அதனைத்...

ஏ9 வீதியில் கடும் பனி மூட்டம்!! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிஸார்!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் அவரது உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது....

காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு 10 வருட சிறை

16 வயதுக்கு குறைந்த பிள்ளையை காதலித்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் 2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில்...

கிளிநொச்சி மாணவிகளுக்கு கருத்தடை ஊசி போடப்பட்டதா? வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் விளக்கம்

கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 10 வயதை தாண்டிய பெண் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் எச்.பி.வி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். இதனை கருத்தடை ஊசி என மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் அதில் உண்மையில்லை. கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு...
Loading posts...

All posts loaded

No more posts