- Tuesday
- May 13th, 2025

மண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள் என்று கொண்டாடுகின்றோம். அதேபோன்றுதான் மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்படவேண்டியவர்கள். இவர்கள் விடுதலைப் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட...

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள உயிலங்குளம் அ.த.க. பாடசாலைக்கு பான்ட் வாத்தியங்களும்,அலுமாரி,மாணவர்களுக்கான டினபோம் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்பட்டன. வன்னியிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றாகிய உயிலங்குளம் .அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பபொருளாதரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி உதவி...

இரணைமடுக்குளம் மீண்டும் எல்லோரினதும் பேசுபொருளாக ஆகியுள்ளது. கொழும்பு அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நேரமொதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கிளிநொச்சி வந்து இரணைமடுவின் வான்கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார். வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிடவந்த நீர்ப்பாசன அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் இனிமேலும் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தைக்...

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில்...

தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தையும், உலக தேனீக்கள் தினத்தையும் முன்னிட்டு முன்னெடுத்துள்ள தேனீக்கள் கிராமம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (05-06-2018) கோண்டாவிலில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. மகரந்தங்களைக் காவுவதன் மூலம் இயற்கைச் சூழலுக்கும், விவசாயத்துக்கும் பாரிய பங்களிப்பைச் செய்துவருகின்ற தேனீக்கள், விவசாய இரசாயனங்களினாலும் நகரமயமாக்கலினாலும் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனைக்...

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளால் புரியப்பட்ட இன அழிப்பின் 9ம் ஆண்டு நினைவையொட்டிய இரத்தான நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.05.2018) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இரத்தத்ததான நிகழ்வில் பெருமளவான...

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் K.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று 01-05-2018 செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின. அதில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர்...

நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப்போராடினோமோ, அதேபடையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கோண்டாவில் ஸ்ரீ...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் தியாகி திலீபனின் நினைவுத் தூபிமுன் இடம்பெற்ற வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில்...

பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார். இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள்...

போட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைக் கண்டறிந்து உரிய நேரத்தில் அணைக்கத்தவறுவார்களாயின் இதுவே பின்னாளில் எந்தக் குறுக்குவழியில் சென்றேனும் எந்தச் சதியைச் செய்தேனும் தான் விரும்பிய இலக்கை அல்லது பதவியை அடைவதற்கு அவர்களைத் தூண்டுகிறது என்று தமிழ்த்தேசியப்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று 08.01.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை- மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம் பெரியகுளம், வவுனியா வடக்கு...

ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது. தமது கற்பித்தல் கடமைகளுக்கு மேலதிகமாக, பெற்றோர்களது கடமைகளையும் சேர்த்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மனப்பூர்வமாக இந்தப் புண்ணிய கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்ற ஆசிரியர்கள் தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படக் கூடியவர்கள்...

தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். மேற்படி நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூர் தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் காலை 10.10 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக கடந்த 23...

கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று வடக்கு மாகாணசபை தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது. இந்தக் குழப்பங்கள் அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர வேறு எதுவும்...

All posts loaded
No more posts