- Monday
- January 12th, 2026
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக குறுந்திரைப்பட போட்டியொன்றை நடத்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை வரைந்த ஓவியம் என்ற தலைப்பில் இக்குறுந்திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது. அதிகூடியது 5 நிமிடங்களில் சுற்றாடல் தொடர்பில் இக்குறுந்திரைப்படங்களை தயாரித்து அனுப்ப முடியும். ஒரு போட்டியாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை அனுப்ப முடியும். ஒரு டிவிடியில்...
வடக்கு மாகாணசபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை, வடக்கு மாகாண சபை இது குறித்த தீர்மானம் ஒன்றை சபை அமர்வின்போது...
யாழ்.நகரிலுள்ள தனியார் நிறுவனங்களினூடாக பொதிகளை பரிமாறுவதில் தவறுகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அண்மையிலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்விரண்டு முறைப்பாடுகளும் யாழ்.நகரிலுள்ள தனியார் பொதிகள் சேவைகள் மீதே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில்...
யாழ்.மாவட்டத்தின் தனியார் துறையில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்ள யாழ்.வணிகர் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் யாழ். வணிகர் கழகத்திடம் விண்ணப்பிக்க முடியும் என வணிகர் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். தனியார் துறைகளில் கணனி இயக்குநர், விற்பனையாளர்கள், வெளிக்கள அலுவலர், கணக்குப் பதிவாளர்கள், லிகிதர்கள், விற்பனை...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், இரவு விடுதிகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் மே மாதம் 03, 04ஆம் திகதிகளில் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்த மக்களால் கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை முன்னிட்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த்தமிழர்களையும் முன்வருமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே...
வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம். இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது...
வடமாகாணத்தில், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம், வடமாகாண சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அலுவலக தகவல் தெரிவிக்கின்றது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை இரு பிரிவுகளாக பிரித்து, கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 ரூபாயும், இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும்...
கொழும்பிலிருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் வரும் அனைத்துப் பயணிகளும் தத்தமது இடங்களிற்கு செல்வதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ்.சாலையினால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களின் நேரத்திற்கும் எற்ப 776 பாதை வழியே குறிகட்டுவானுக்கும், 777,780 பாதைகள் வழியே ஊர்காவற்றுறைக்கும், 788 பாதை வழியே இளவாலைக்கும் 789...
பொருட்களின் நிறைகளை நுகர்வோர் சரியாக தெரிந்து கொள்ளும் வகையில் நாடாளவிய ரீதியில் இயங்கும் ஒவ்வொரு விற்பனை நிலையம் மற்றும் பேக்கரிகளிலும் பிரத்தியேகமாக தராசு ஒன்று கட்டாயம் வைக்கப்படல் வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறைச்சட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டாயமாக்கப்படும் என...
உங்கள் விண்ணப்பப்படிவத்திற்கான அடையாள அட்டையை அவசரமாக பெற்றுக் கொடுப்பதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் துரித சேவை ஒன்றை அறிமுகம் செய்கின்றது
யாழில் உள்ள உணவகங்களில் 90 வீதமான உணவகங்கள் உணவகம் ஒன்றுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லை என யாழ்.மாநகர சபையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் உணவகங்களில் கழிவகற்றும் பாதை, உணவுப் பொருட்கள் வைக்கும் இடம், சமையலறை, களஞ்சியம் என்பன சீரான முறையில் காணப்படவில்லை அல்லது அமைக்கப்படாமையே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தில் உணவு சம்பந்தமான...
சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிறீஸும் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார். சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என்று...
யாழ். மாவட்டத்தில் உணவிலிருந்து ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 25 வீதம் தொடக்கம் 30 வீதம் வரையில் 2014ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கம் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தது. உலக சுகாதார தினம் 7ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தின்...
கழிவு நீர் மாசடைதலினால், பல்வேறு தரப்பினரிடமும் உதவிக்காக அணுகிய போதும், குறைந்த பட்ச ஜனநாயக உரிமை கிடைக்கவில்லை என கோரி, மக்கள் பேரணி ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் மற்றும் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் விதை குழுமம் ஆகியன இணைந்து, இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்....
இலங்கையில் வாழ்கின்றவர்கள், நாளை சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கே அரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. எனினும், சந்திர கிரகணத்தின் இறுதி இரவு 8 மணிவரையும் தென்படும் என்றும் அறிவித்துள்ளது. சந்திரன்...
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக...
யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை 0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500...
Loading posts...
All posts loaded
No more posts
