Ad Widget

பொருட்களின் நிறைகளை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கான விசேட திட்டம்!

பொருட்களின் நிறைகளை நுகர்வோர் சரியாக தெரிந்து கொள்ளும் வகையில் நாடாளவிய ரீதியில் இயங்கும் ஒவ்வொரு விற்பனை நிலையம் மற்றும் பேக்கரிகளிலும் பிரத்தியேகமாக தராசு ஒன்று கட்டாயம் வைக்கப்படல் வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த நடைமுறைச்சட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டாயமாக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

நுகர்வோரினால் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் அவர்களினால் வழங்கப்படும் பணத்திற்கு ஏற்றவாறு இல்லை என்றும் அவைகளின் நிறை மிகக் குறைவாக காணப்படுவதாகவும் நுகர்வோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதற்கட்டமாக வர்த்தகர்களும் நுகர்வோரும் இது தொடர்பில் தௌிவுப்படுத்தபடவுள்ளதோடு இரண்டாம் கட்டமாக பிரத்தியேகமாக தராசு ஒன்று வைப்பதைக் கட்டாயப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வௌியிடப்படவுள்ளது.

Related Posts