தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு இடமாற்றம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவிருந்த கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வானது அக் கலையரங்கம் பயன்படுத்துவதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டதால் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் அறிவித்துள்ளார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழ் ஒன்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிவித்துள்ளது. எனினும் இச்சட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிவிலக்கு...
Ad Widget

விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்ய சட்ட ரீதியிலான அனுமதி

வாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்யும் அனுமதியை சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சஞ்சீவ பந்துகீர்த்தி இதுதொடர்பாக தெரிவிக்கையில் . தமது அவயவங்களை தானம் செய்ய விரும்புவோர் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அதனை குறிப்பிடுவதன் மூலம் இந்தப் பணியை துரிதமாக மேற்கொள்ள முடியும்...

வழிபாட்டுத்தளங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தடை!

வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது. தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள்...

வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அறிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை குறைப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைப்பதோடு வினைத்திறனான சேவையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதன்மூலம கிடைக்கும்.

உள்ளுராட்சி தேர்தல் பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்து பேருக்கு மேலதிகமாக வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...

கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை!

கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதினால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை , வடக்கு ,கிழக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலதிணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, இரத்தினபுரி, காலி ,மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கும் IM யப்பான் நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக ஜப்பானில் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக யப்பான் மொழி ஆற்றலில் N4 தரத்துடன் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கமுடியும். பணியாளர் சேவை (Caregiver) தொழிலுக்கு 150 பெண்களுக்கு தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது....

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு...

பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கு தேசிய அடையாள அட்டை!

பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவொன்று செயற்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்தார். வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டினால், அவற்றிற்கு மேல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டி ஒட்டப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இத்தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் அடங்கிய சுவரொட்டி அவற்றிற்கு...

இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வட, வட மத்திய கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம். நாட்டின் பெரும்பாலான இடங்களில்; மழை பெய்யும்.என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றறுக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகும் என்று...

தேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனையை தடைசெய்ய ஜனாதிபதி உத்தரவு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக எதிர்காலத்தில் ஊடக கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறும்...

பிரமிட்முறை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு இடைக்காலத்தடை!

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே நீதிபதி இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தார். மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக...

இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!

இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும். 14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம் என்று கூறப்படுகிறது. இந்த எரிகற்களின் வீழ்ச்சி, நீலம், சிவப்பு, பச்சை,...

சருமத்தை அழகு படுத்த பயன்படுத்தும் பொருட்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!

சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளுக்கு சந்தையில் பெரும் கிராக்கி உண்டு.இதனை பயன்படுத்துவதன் மூலம் மேனி அழகாக காட்சியளிக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை. இதுதொடர்பில் சந்தையிலுள்ள பொருட்கள்குறித்து நுகர்வோர் அதிகார சபை பாவனையாளர்களின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான...

வெளிநாடு செல்லும் மக்களுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் எச்சரிக்கை!

தரகர்களால் தரப்படும் வீசா மற்றும் விமான பயணச் சீட்டை பயன்படுத்தி சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வெளிநாடு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ்ப்பாணப் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்ல முற்பட்ட பலர் ஏமாற்றப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே பொலிஸார் குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். நேற்றையதினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற...

இடிமின்னலிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு , வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...

வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு : மக்களே எச்சரிக்கை !

தெற்கு அந்தமான் தீவு கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக உருவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 5 ஆம் திகதி மேலும் வலுவடைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல்பகுதி குறிப்பாக வடக்கு, கிழக்கு,...
Loading posts...

All posts loaded

No more posts