Ad Widget

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உதவித் தொகை! பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்!!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார்துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளைக்குப் பொறுப்பான அதிகாரி இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

குறித்த உதவித்தொகையை யாழ்.மாவட்டத்தில் வழங்கும் பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகள் இந்த உதவித் தொகைப் பெற முடியும். பணியாற்றும் நிறுவனத்தால் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதித்தொகை செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.

இந்த விடயங்கள் பின்பற்றப்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தமது விவரங்களை யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள புனர்வாழ்வுக் கிளையில் பதிவு செய்யவேண்டும்.

தகுதியானவர்களுக்கான 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று புனர்வாழ்வுக் கிளையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Posts