- Wednesday
- October 14th, 2026
முகமது நபி பெயர் சூட்டப்பட்ட ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளித்துள்ளார். முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மொழி...
நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறார். திரைப்பட தணிக்கை குழு உறுப்பினரான அவர் நேற்று மயிலாப்பூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், சில மர்ம நபர்கள் தனது வீட்டுக்கு வெளியில் நின்று கண்காணிப்பதாகவும், இது தொடர்பாக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும்...
ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி ரூபாயை எட்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமனா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான...
‘முஹம்மட்: மெஸெஞ்சர் ஆஃப் காட்’ படம் தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மீது மும்பையைச் சேர்ந்த ரஸா அகாதெமி என்ற அமைப்பு ஃபத்வா விதித்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்பட இந்தத் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் இந்த ஃபத்வா விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம்...
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை 05.30க்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. அத்துடன், இந்த நிகழ்வு நாளை மறுதினம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும் சுமார் 50 வரையிலான கதைப் படங்கள்...
இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார். இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா...
நடிகர் கமல்ஹாசன் தனது பெயரில் செயல்பட்ட ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார். இதன் மூலம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் கமல்ஹாசனை ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் தூதராக நியமித்தார். இதைத்தொடர்ந்து ரசிகர்களை வைத்து சென்னை அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை நேரில் சென்று சுத்தம் செய்தார். தமிழகம் முழுவதும்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய நிர்வாகிகள் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2009 மற்றும் 2012-ம் ஆண்டு தேர்தல்களில் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக ராதாரவி பதவி வகித்தார்....
திப்பு சுல்தான் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில், ரஜினிகாந்த் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடக்கிறது. சரித்திர கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த ‘பாகுபலி’ படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இது தயாரிப்பாளர்களுக்கு வரலாற்றுப்படங்கள் எடுக்கும்...
கவுண்டமணி கதாநாயகனாக நடித்து, ஆரோக்கியதாஸ் டைரக்ஷனில், டாக்டர் சிவபாலன் தயாரித்துள்ள படம், ‘49 ஓ.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல்களை நடிகர் சத்யராஜ் வெளியிட, நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் சத்யராஜ் பேசியதாவது:- ‘‘நான் எத்தனையோ அழகான நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருந்தாலும், அண்ணன் கவுண்டமணியுடன்...
ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்க இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் ஒரு நிழல் உலக தாதா என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் புகைப்படம் ஒன்றில் ரஜினி மலேசிய போலீஸ் அதிகாரி தோற்றத்தில் உள்ளார். இதனால்,...
ஆர்யாவுடன் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகமாக்கி குண்டு பெண்ணாக மாறினார். படத்துக்காக பிரபல ஹீரோக்கள் தங்கள் உடல் எடையை அதிகமாக்கி கொள்வார்கள். பின்னர் எடையை குறைப்பார்கள். கதாநாயகிகள் அனைவரும் உடலை ஒல்லியாக ஒரே அளவில் வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்கள். ஆனால் அனுஷ்கா இதற்கு விதிவிலக்கு ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின்...
வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகள் புனர்வாழ்வு நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டும் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பது தொடர்பான போட்டிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
இனி ஒரு படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்கள், 200 நாட்கள் என இழுக்கப் போவதில்லை. அதிகபட்சம் நாற்பது நாட்களில் முடிக்கப் போகிறேன், என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் படங்கள் முன்பெல்லாம் நூறுக்கும் அதிகமான நாட்களுக்கு படப்பிடிப்பு நடப்பது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய படமான பாபநாசம் வெறும் 40 நாட்களில் எடுக்கப்பட்டு, நல்ல...
லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் "வாண்டட்" என்னும் இசைக் குழுவில்...
பழம்பெரும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அதிகாலை 4.15- அளவில் இவ் உலகை விட்டு நீங்கினார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1,200 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் சேர்ந்து 700 படங்களுக்கும், தனியாக 500...
ஐயப்பன் குறித்து யேசுதாஸ் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல், ஹரிவராசன் என ஆரம்பிக்கும். ஹரிவராசனம் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது. இந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி, இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனையாளராக திகழும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, சபரிமலை ஐயப்பனின் பெருமையையும், புகழையும் விளக்கும் பல பாடல்களை பாடி மதச்சார்பின்மை மற்றும் சர்வதேச...
கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ், எஸ்தர், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மலையாள படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கமல்,...
ஐ லவ் யூ செல்லம் என்ற வார்த்தையை தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலக்கச் செய்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கில்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமான பிரகாஷ் ராஜை தற்போது தமிழில் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் சிறிது காலம் காணாமல் போயிருந்த பிரகாஷ் மீண்டும் கமலின் தூங்கா வனம் படத்தின் மூலம்...
சிம்பு நடித்துள்ள கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் விபூதி பட்டை போட்டு நடுவே குங்குமம் வைத்து பக்திப்பழமாய் காட்சித்தருகிறார் சிம்பு. இந்த போஸ்டர் டிவிட்டரில் டிரெண்ட் ஆனதோடு நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது. சிம்பு தனது படங்களில் எப்போதுமே ஸ்டைலிஸ் ஆகவே காட்சி தருவார். ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் கான்...
Loading posts...
All posts loaded
No more posts
