புலி படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 1-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள்...

சுதீப்பை இரண்டு வில்லன்களுடன் மோதவிட்ட கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார். சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுதீப்புக்கு வில்லனாக முகேஷ் திவாரி, சரேத் லோஹித்சுவா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நாசர்,...
Ad Widget

விஜய் மிகவும் நல்லவர் – ஸ்ருதிஹாசன்

சிம்புதேவன் இயக்க்ததில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, விஜய் எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம். விஜய் மிகப்பெரிய நடிகர் என்றாலும் அதை...

நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி?

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் சி.கல்யாண் வாங்கியுள்ளார். இந்நிலையில், தெலுங்குக்கும், தமிழுக்கும் அறிமுகமாகும் அகிலை, சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகப்படுத்தி வைக்கப்...

தேர் திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருட்டு

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்திருவிழா சனிக்கிழமை(26) இடம்பெற்றது. இதன்போது பெண்கள் அணிந்திருந்த 7 பவுண், 5 பவுண் தாலிக் கொடிகள் மற்றும் இரண்டு சிறுமிகள் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு...

கமலை தொடர்ந்து ரஜினி படத்தில் நடிக்கும் கிஷோர்

கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்த கிஷோர் தமிழில் ‘ஜெயங்கொண்டான்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு வரவேற்பு பெறவே, இவருக்கு அடுத்தடுத்து வில்லன், போலீஸ், குணச்சித்திர வேடங்கள் அமைந்தது. முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் படத்தில் நடித்த கிஷோர், கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில்...

மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் விக்ரம்

'ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து...

காயமடைந்த நிலையில் நடிகை குஷ்பு வைத்தியசாலையில்!

நடிகை குஷ்பு சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘ஆம்பள’ படங்களில் கவுரவ தோற்றங்களில் தலைகாட்டினார். அதன்பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. சில டைரக் டர்கள் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். தி.மு.க.வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு, அக்கட்சியில் தேசிய...

அஜித் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

‘என்னை அறிந்தால்...’ படத்தை அடுத்து ஏ.எம்.ரத்னம் மிக பிரமாண்டமான முறையில் அஜித்குமாரை வைத்து ஒரு புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. படத்துக்கு பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் வேகமாக வளர்ந்து வந்தது. படத்தின் பெயரை அறிந்து கொள்வதற்கு அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக...

”கத்தி” விவகாரம் முடியும்வரை “புலி” படத்திற்கு தடை??

கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் அன்புராஜசேகர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜசேகர். இவர் தாகபூமி என்ற தன்னுடைய குறும்படத்தை பெரிய திரைப்படமாக வெளியிட காத்திருந்தார். இந்நிலையில்...

சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் : கமல் – ரஜினி ரசிகர்களிடையே மோதல் ??

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முன்தினம், தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தார். அப்போது, “நான் ரஜின ரசிகன். அவரை ரொம்ப பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல்” என்று கூறினார். அதோடு, “ரஜினி முருகன்” என்ற படத்தில் ரஜினி ரசிகராக நடித்துக்கொண்டிருக்கிறார். இது கமல் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பேஸ்புக், ட்விட்டர் சமூகவலைதளங்களில் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து...

சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல்

நடிகர் சிவகார்த்திகேயனை நடிகர் கமல் ரசிகர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகார்த்திகேயனை இன்று ஞாயிற்றுக்கிழமை(20) காலை மதுரை விமான நிலையத்தில் வைத்து கமல் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது தன்னை ரஜினி ரசிகர் என்றும் கமல் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை...

இவன் உருப்படவே மாட்டான்! ரோபோ சங்கரைத் திட்டிய பெண்கள்

இவன் எல்லாம் உருப்படவே மாட்டான் என மதுரைக்கார பெண்கள் தனக்கு சாபமிட்டதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். சாஹசம் பட விழாவில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தான் சிறுவனாக இருக்கையில் நடந்த சம்பவத்தை பற்றி சுவாரஸ்யமாக கூறினார். அவர் தெரிவித்தாவது, "நான் சிறுவனாக இருக்கையில் என் அம்மாவுடன்...

ரகுமான் மற்றும் ரஜினிக்கு அச்சுறுத்தல் – பொங்கியெழுந்த பிரகாஷ்ராஜ்

ரஜினி, திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க போகிறார் என்று வெளியான செய்தியை அடுத்து இந்து முன்னனி மற்றும் தமிழக பா.ஜ.க ஆகிய இரண்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த...

‘போர்க்களத்தில் ஒரு பூ’ : என்மீது தவறில்லை – S.V. சேகர்

இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்தத் திரைப்பட விவகாரம் தொடர்பில் தன்மீது தவறில்லை என மறுதணிக்கைக்குழுவின் தலைவர் எஸ்.வி.சேகர் விளக்கமளித்துள்ளார். திரைப்படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்த நிலையில், கடந்தவாரம் பேட்டியளித்த அத்திரைப்படத்தின்...

தூங்காவனம்’ படம் 14 கோடி ரசிகர்களை திருப்தி செய்யும் – கமல்ஹாசன்

‘தூங்காவனம்’ படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் 14 கோடி ரசிகர்களை திருப்தி செய்யும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘தூங்காவனம்’. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் திரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், யூகி சேது, கிஷோர், சந்தானபாரதி, ஜெகன், உமா ரியாஸ்கான், ஆஷா சரத்...

ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு

ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில்...

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தளர்வு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நீண்டகாலப் புனரமைப்பின் பின் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயத்தில் குறித்த ஆலய தர்மகத்தா குழுவினரால் ஆலயத்திற்குள் வழபடச்செல்லும் ஆண்கள் ஷேட் அணியாமல் வேட்டியுடனும் பெண்கள் பஞ்சாபி முதலிய ஏனைய ஆடைகள் தவிர்த்து சேலையுடனும் வரவேண்டும் என்ற சட்டம்விதிக்கப்பட்டதால் அடியவர்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு...

என் அடுத்தப் படத்தைப் பெண்கள் பார்க்கவேண்டாம் – மிஷ்கின்

ஆர்.பி. ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தற்காப்பு. இயக்குநர் வாசுவின் மகன் சக்தி தனது பெயரை சக்திவேல் வாசு என்று இந்தப் படத்தில் இருந்து மாற்றிக்கொண்டுள்ளார். தற்காப்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது: ஒரு படம் தோற்றுவிட்டால் 50 குடும்பங்கள் தோற்றுவிடும். ஒரு கலைஞனுக்குச் சுதந்திரம் தேவை. படத் தணிக்கையின்போது...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை மீள் மின்னேற்றலாம்

வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மின்னை மீள் நிரப்பும்...
Loading posts...

All posts loaded

No more posts