- Thursday
- October 15th, 2026
இயக்குநரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது 'கன்னா பின்னா'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சேரன் பேசுகையில், 'சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான்...
சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்த சிம்புவின் தம்பி குறளரசன் மீண்டும் அண்ணனின் படத்துக்கு இசையமைக்கிறார். இது நம்ம ஆளு படம் தாமதமானதற்கு குறளரசன் டியூன்களை சரியான நேரத்தில் தராததும் ஒரு காரணம். பின்னணி இசை சேர்ப்பிலும் தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாக படத்தின் முதல் டீசரை பின்னணி இசை இல்லாமல் பாண்டிராஜ்...
இயக்குனர் கவுதம் மேனன் தனது சொந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். இயக்குனர் கவுதம் மேனனின் படங்களில் எல்லாம் வில்லன்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். வில்லனாக நடிக்கும் நடிகர்கள் அதன் பிறகு ஹீரோவாகும் அளவுக்கு பிரபலம் ஆவார்கள். அப்படி புகழ்பெற்ற அவரது வில்லன்களுக்கு எல்லாமே குரல் கொடுத்தது அவர் தான். அவர் குரலே மிரட்டலாக இருக்கும் என்றால்...
சிவாஜி கணேசன் பாதி, நாகேஷ் பாதி கலந்து செய்த கவலை நான் என செவாலியே கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மட்டும்...
சத்யம் திரையரங்கம் போன வார இறுதியில் ஒரு மிக பெரிய முயற்சியை செய்து சாதித்து இருக்கிறது. கண் பார்வை யற்றவர்களுக்கு Audio Descriptive Movie திரையிட்டு இருக்கிறார்கள். இந்த Audio Descriptive Movie ஒலி சித்திரத்தில் இருந்து எப்படி வேறு படும் என்றால், உதாரணத்துக்கு கபாலி படத்தில் அந்த கோழிக்கறி காட்சியில், ரஜினி அமர்ந்து இருக்கும்...
ரஜினியின் நடிப்பில் வெளியான கபாலி உலக அளவில் வசூல் சாதனைகளை படைத்துள்ளது. 700 கோடி வசூலைக் கடந்து 1000 கோடியை எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. கதைக்களம் அமைந்த மலேசியாவில் கபாலி திரைப்படம் பாஸிட்டிவான விவாதங்களை உருவாக்கி உள்ளது. இளம் தலைமுறையினரிடம், தங்களது முன்னோர்களின் தியாக வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏழ்மையில் இருந்து...
பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை பெற்று, பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு விருது கிடைத்த பரபரப்பு அடங்குவதற்குள் இயக்குனர், நடிகர், கதாசிரியர் என சினிமாவில் பன்முகம் கொண்ட பார்த்திபனுக்கு அமெரிக்கா அமைப்பு ஒன்று விருது வழங்கி கௌரவித்துள்ளது. சினிமாவில் மாறுபட்ட சிந்தனையுடன் பணிபுரிந்து வரும் அவருக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கிவரும் Rocheston Accreditation...
திரைப்படங்களில் கதாநாயகனை விட வில்லன் கதாபாத்திரங்கள் வலிமையாக சித்தரிக்கப்படுகின்றன. நடிப்பு திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் இதில் அதிகம். காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதற்கும் இந்த கதாபாத்திரங்கள் உதவுகின்றன. கடைசி வரை வில்லன் கை ஓங்கி இருப்பதுபோல் திரைக்கதையை நகர்த்தி கிளைமாக்சில் கதாநாயகன் ஜெயிப்பதுபோல் முடிக்கும் படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்கின்றன. எனவே வில்லன், கதாநாயகன் இரண்டு வேடங்களிலும்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் வீரம். தமன்னா நாயகியாக நடித்த அந்த படத்தில் அஜித்தின் தம்பிகளாக விதார்த், பாலா உள்பட நான்கு பேர் நடிக்க, அஜித் வீட்டு வேலைக்காரராக மயில்வாகனம் என்ற வேடத்தில் அப்புக்குட்டி நடித்திருந்தார். அதன்காரணமாக அஜித் காம்பினேசனில் அவருக்கு பல காட்சிகள் அமைந்தன. அதோடு, அந்த படத்தில் நடித்த பிறகு...
ரஜினி நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் ‘பாட்ஷா’. மும்பை டான், ஆட்டோக்காரர் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார் பாட்ஷா. ரஜினி நடித்த படங்களில் ‘பாட்ஷா’ படமும் ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொட்ட படம் என்று சொல்லலாம். சமீபகாலமாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., நடித்த பழைய படங்கள் தற்போது டிஜிட்டலில்...
தனுசுடன் தங்கமகன் படத்தில் நடித்தவர் சமந்தா. அந்த படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டானது. அதனால் அதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்திலும் தனுசுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாதான் கமிட்டாகியிருந்தார். ஆனால் இப்போது சமந்தா வேடத்தில் அமலாபால் நடித்து வருகிறார். அதற்கு காரணம், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து...
செவாலியே விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிரான்சு நாடு ‘செவாலியே’ விருதினை நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு அவர் நன்றி தெரிவிக்கும் வகையில் ‘வாட்ஸ் அப்’பில் 2 நிமிட குரல் பதிவினை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- பிரான்சு அரசு கலை இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமிதத்துடன்,...
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம்...
தமிழ்சினிமாவில் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்தவர் கமல்தான். யாருடைய கண் பட்டதோ... அவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக கமலின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட கமலை, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஓய்விலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்து...
சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா, அதன்பின்னர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அநேக ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 இடத்தை பிடித்த...
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாம் சிந்துவின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
அஜித் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் நடந்து வருகிறது. அங்குள்ள எல்லையோரப் பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார். அந்தப் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. பார்ப்பதற்கு அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தின் புகைப்படம் போலவே...
விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. மிமிக்ரி மற்றும் மற்றும் காமெடி திறமைகளை வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டிய சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், உள்ளிட்ட பலர் திரைப்பட நடிகர்களாகிவிட்டார்கள். கலக்கப்போவது யாரின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 6வது சீசனுக்கான பணிகள்...
ஏழாம் அறிவு படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்தில் அவருடன் மீண்டும் இணைந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இருவருமே நாயகிகளாக நடிக்கின்றனர். கதைப்படி இந்த படத்தில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாகி விடுவதால் அவருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் அதிகமாக இல்லையாம். ஆனால் ஸ்ருதிஹாசன், படம் முழுக்க சூர்யாவுடன் பயணிக்கும் வேடத்தில் நடித்துள்ளாராம்....
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்க கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் 'காஷ்மோரா'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை நேற்று இரவு வெளியிடப்பட்டது. இந்தப் படம் பற்றி இதுவரை எந்த ஒரு புகைப்படம் வெளிவராத நிலையில் நேற்று வெளியான முதல் பார்வை புகைப்படம் வியக்க வைக்கும் அளவில் அமைந்துள்ளது. மொட்டைத்...
Loading posts...
All posts loaded
No more posts
