Ad Widget

இருமுகனில் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை: இயக்குனர் ஆனந்த் ஷங்கர்

வரும் வாரம் வெளியாகவுள்ள இருமுகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று இத்திரைப்படத்தின் இயக்குனார் ஆனந்த் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

iru_mugan

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:

இந்த திரைப்படத்தில் விக்ரம் அகிலன் என்னும் ‘ரா’ அதிகாரி மற்றும் ‘லவ்’ என்னும் விஞ்ஞானி ஆகிய இரு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அகிலன் கதாபாத்திரம் கூட எந்த நடிகர் வேண்டுமானாலும் ஏற்று நடித்துவிடலாம். ஆனால் ‘லவ்’ கதாபாத்திரத்தை விக்ரம் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. அந்த அளவுக்கு தனித்தன்மை வாய்ந்த அந்த கதாபாத்திரத்தை விக்ரம் சிறப்பாக செய்துள்ளார்.

படத்தின் ட்ரைலரை பார்த்த அனைவரும் ‘லவ்’ கதாபாத்திரம் ஒரு திருநங்கை என்று தவறாக எண்ணி விட்டனர். அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். அனைவரும் விரும்பும் வகையில் அதை நான் உருவாக்கியுள்ளேன். லவ் கதாபாத்திரம் எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று யாராலும் யூகிக்க முடியாது.

சண்டைக்காட்சிகளை பொறுத்த அளவில் கதையுடன் இணைந்து செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.ரவி வர்மா மற்றும் அன்பறிவ் ஆகிய இருவரும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமீன்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Related Posts