- Wednesday
- October 14th, 2026
கோவா மாநிலம் பனாஜி நகரில் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. விழாவை மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி சாதனை...
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. மூன்று பக்கங்களில் மிக நீளமாக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திரையில் 3 டி தொழில்நுட்பத்தில் '2.0' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். அதை வெளியிடுவதற்கு முன்பாக தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஒவ்வொருவரையும் மேடைக்கு...
2.0 படத்தில் வில்லன் வேடத்திலும் தான் நடித்துள்ளதை முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் உறுதிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக 2.0 படம் வெளியாகிறது. பொதுவாக இரண்டாம் பாகம் என்று கூறிக் கொண்டு வரும் படங்கள், முதல் பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வரும். ஆனால் முதல் பாகத்தின் கச்சிதமான தொடர்ச்சியாக 2.ஓவை...
அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. அவருக்கு தற்போது 36 வயது. ஆனாலும் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக நடிக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி.3’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், பாக்மதி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படம் போன்றவற்றிலும்...
நடிகை நயன்தராவுக்கு நேற்று பிறந்த நாள். இதனை சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது நயன்தரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகரில் நடந்து வருகிறது. நேற்றும் நயன்தாரா கலந்து கொண்டு நடித்தார்....
தலைப்பை படித்து விட்டு முகம் சுழிக்கத் தோணுதா? சத்தியமா இது ஒரு படத்தோட தலைப்புதான். தலைப்பு பற்றி இயக்குனர் ந.கிருஷ்ணகுமாரின் விளக்கம் இது... "சிலர் யாருடைய பேச்சையும் கேட்காமல் முடிவு எடுப்பார்கள். அந்த முடிவுகள் தவறாக இருந்தாலும் எடுத்த முடிவு என்னோடது என்று உறுதியாக இருப்பார்கள். நான் எடுத்து முடிவு கோணலா இருந்தாலும் அது என்னோடது....
கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’, ‘தூங்காவனம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜிப்ரான். தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்திறகும் இவர்தான் இசையமைப்பாளர். கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்துவரும் ஜிப்ரான், தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதிக்கவுள்ளார். அதுவும் அர்னால்டு ஸ்வாசர்னேகர் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்றால் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயம்தான். தமிழின்...
'2.O' படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் தான் மும்பையில் வெளியிடப்படுகிறது, மற்றவையெல்லாம் தென்னிந்தியாவில் தான் நடைபெறும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ரோபோ படம் 'எந்திரன்'. இதன் இரண்டாம் முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் சுமார் ரூ.350 கோடி செலவில் '2.O' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினிக்கு...
அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றி விருந்தில், சிம்புவுடன் நடிகை வரலட்சுமியும் பங்கேற்றார். விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின், சிம்பு நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. படங்களின் வெளியீடும், பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. இந்நிலையில், மூன்றாண்டாக படப்பிடிப்பில் இருந்த, அச்சம் என்பது மடமையடா படம், சமீபத்தில் வெளியானது. இதற்கு, நல்ல வரவேற்பு...
கதாபாத்திரங்களுக்காக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்வதில் விக்ரம் முன்னோடியாக இருந்து வருகிறார். குறிப்பாக, ஐ படத்திற்காக தனது உடலை வருத்தி அவர் நடித்தது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர்களை வரை வியக்க வைத்தது. அதேபோல் சூர்யாவும் சில படங்களில் உடலை வருத்தி நடித்திருக்கிறார். அந்த வகையில், ரசிகர்களுக்கு தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக...
நடிகை கவுதமி தனது மகளை நடிகையாக்க தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். நடிகை கவுதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து ஓராண்டில் பிரிந்துவிட்டார். சந்தீப், கவுதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். சுப்புலட்சுமிக்கு தாய் வழியில் நடிகையாக ஆசையாக உள்ளதாம். மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்துள்ளாராம் கவுதமி....
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, சினிமா பிரபலங்கள் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழைய ரூ.500,...
கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' கடந்த 11ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு ரீமேக்கான 'சாஹசம் சுவாசகா சாகிப்போ'வும் அதே தினத்தில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களுமே இளம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு ரசிக்கப்படுகிறது. கடந்த மூன்று...
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார். படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். ரஞ்சித், ரஜினி...
அஜீத்தின் பெருந்தன்மையை பல வருடங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியே கூறியுள்ளார். நடிகர் அஜீத் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். அவர் எந்த ஒரு பிரச்னையிலும் சிக்காமல் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு அதன்படி நடப்பவர். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜீத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தை பிரபல தயாரிப்பாளரும்,...
பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நடிகை சபர்ணா தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துக் கொண்ட சபர்ணாவின் உடலை அழுகிய நிலையில் மீட்ட போலீசார், அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சின்னத்திரை தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சபர்ணா, மர்மமான முறையில் அவரது...
சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது. ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற ரூ.2 கோடி செலவில் திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டிருந்தது....
விஜய் தனது மகன் சஞ்சய்யை ‘வேலாயுதம்’ படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில்தான் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக...
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் இன்று முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் அடுத்ததாக சந்தானத்தை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், விக்ரமிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அச்சம்...
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்த படம் நானும் ரெளடிதான். இந்த படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ். அவர் நடித்த காட்சிகள் தியேட்டர்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியதால், பின்னர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த தில்லுக்குத்துட்டு படத்திலும் காமெடி வேடத்தில் நடித்தார் ஆனந்தராஜ். அந்த படத்தில் சந்தானத்தின் அப்பாவாக நடித்தபோதும் காமெடி காட்சிகள் ஸ்கோர் பண்ணியிருந்தார். விளைவு,...
Loading posts...
All posts loaded
No more posts
