- Wednesday
- October 14th, 2026
காஞ்சனா-2 படத்தை கடந்த ஆண்டு வெளியிட்ட ராகவா லாரன்ஸ், அதை யடுத்து சாய் ரமணி இயக்கத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வந்தார். நிக்கி கல்ராணி நாயகியாக நடித்து வந்த இந்த படத்தை 2016-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் லாரன்சின் டார்கெட்டாக இருந்தது. ஆனால், அந்த படத்தை...
இந்தி நடிகர் அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனது படங்கள் வசூல் குவிப்பதாகவும், நல்ல கதைகள் எனக்கு அமைவதாகவும் பலரும் பேசுகிறார்கள். நான் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன். டைரக்டர்கள் கதை சொல்லும்போது ஒரு ரசிகன் மாதிரி கேட்பேன். எனக்குள் இருக்கும் அந்த ரசிகனை கதை திருப்தி செய்தால் உடனே...
நடிகை டாப்சி இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடித்தேன். ஒருகட்டத்தில் சினிமா பிடித்தது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன். எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும்...
தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பைரவா'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன், மீண்டும் விஜய்யை வைத்து இயக்கியுள்ளார். இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ளது. அழகிய தமிழ் மகன் போன்றே பைரவா படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில்...
'தலைவா' என்று ரசிகர்களால் கடவுள் போல் போற்றப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சிறந்த விமர்சகர் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தானாம்.
சந்தானம் நடிக்க இருக்கும் "சக்க போடு போடு ராஜா" படத்திற்கு சிம்பு இசையமைக்க உள்ளார். நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும் தனது தந்தை விஜய.டி.ராஜேந்தரைப் போலவே,சிம்புவுக்கு பன்முகத் திறமை உண்டு. குறிப்பாக பாடல்,இசை ஆகியவற்றில் அவருக்கு நல்ல பரிட்சயம் உண்டு. இதுவரை பாடகராக மட்டுமே அறியப்பட்டு வந்த சிம்பு,தற்போது சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா...
ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் தோல்வியடைந்தாலும்,அதன் மூலம் பல பாடங்களை கற்றுக் கொண்டதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.ஆனால் ஆஸ்கர் விருதுக்கான இறுதிச்சுற்று போட்டியில் விசாரணை படம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படம்...
புலனாய்வு சம்பந்தப்பட்ட கதையில் மிஷ்கின் இயக்கும் படம் துப்பறிவாளன். இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடிக்கிறார் விஷால். அக்ஷ்ராஹாசன், ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில், பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் ஒரு புலனாய்வு சீனியர் ஆபீசராக நடிப்பதற்கு சில நடிகர்களை பரிசீலனை செய்து வந்த மிஷ்கின், டைரக்டர் கே.பாக்யராஜை அந்த வேடத்துக்கு ஒப்பந்தம்...
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பைரவா படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. பைரவா படத்தின் வெளியீட்டு தேதி...
படையப்பா ரம்யாகிருஷ்ணன், திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் பிசியானவர், தொடர்ந்து சினிமாவிலும் பிசியாகி விட்டார். முக்கியமாக, ராஜமவுலியின் பாகுபலி படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு, இப்போது அதே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அதோடு, கமலின் சபாஷ்நாயுடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன், ரஜினியின் 2.ஓ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில்...
காதல் படத்திற்கு பிறகு வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வந்த பரத்திற்கு, ஒருகட்டத்தில் தொடர்ந்து வீழ்ச்சியாக அமைந்தது. அதனால் தற்போது அவர் தனது ரூட்டையும் மாற்றி மார்க்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அதன்காரணமாக, என்னோடு விளையாடு படத்தில் குதிரை ரேஸ் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் நடித் திருக்கும் அவர், அதற்கடுத்து பொட்டு,...
இருமுகன் படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சாமி-2 வில் விக்ரம் நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிங்கம்-3 வேலைகளில் ஹரி பிசியாக இருந்தார். அதனால் சிங்கம்-3 வெளியான பிறகு ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி ஜூன் மாதம் சாமி-2 படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் ஹரி. இந்தநியைில், தற்போது கெளதம்மேனன், வாலு விஜயசந்தர் இயக்கும் படங்களில் நடிக்க கதை...
அஜித்தின் பைக் ஓட்டும் திறனை பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார் பிரபல பைக் ரேஸ் பிரியரும், சண்டைக்கலைஞருமான பல்கேரியாவை சேர்ந்த ஜோரியன். வேதாளம் படத்தை தொடர்ந்து அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தற்காலிகமாக AK 57 என்றே அழைத்து வருகிறார்கள். இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அஜித் உடன்...
நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவற்றில் அதிகமான ரசிகர்கள் தங்களை பின்தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே நடிகைகளின் மார்க்கெட் நிலவரங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதற்காகவே அடிக்கடி சமூகம் சம்பந்தமான கருத்துகளை பதிவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களையும் பதிவேற்றம்...
தெறி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பைரவா'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சதீஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ‛அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் பாடல்கள்...
பீலே - பெர்த் ஆப் எ லெஜென்ட்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா, இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். 2009-ம் ஆண்டு ‛ஸ்லம்டாக் மில்லினியர்' என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று...
பிரபல ஹிப்-ஹாப் பாடகர் யோகி பி. மலேசியாவை சேர்ந்தவரான இவர், தனது மலேசிய நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். அதில் இவரது ‛மடை திறந்து பாடல்...' மிகவும் பிரசித்து பெற்றவை. இசை ஆல்பங்களை இயற்றி வந்த யோகி பி-யை விஜய்யின் குருவி படத்திற்காக அழைத்து வந்தார் வித்யாசாகர். அதில் இடம்பெற்ற ‛ஹேப்பி நியூ...
விக்னேஷ் சிவன் இயக்கிய ‛நானும் ரவுடிதான்' படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர் விஜய்சேதுபதியும், நயன்தாராவும். அந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைய இருக்கிறார்கள். டிமான்டி காலனி இயக்குநர் அஜய் ஜானமுத்து, தற்போது ‛இமைக்கா நொடிகள்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க அவருடன் நயன்தாரா முக்கியமான...
அப்பா கமலின் இயக்கத்தில் தனக்கு நடிப்பது பயமாக இருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன், தற்போது முதன்முறையாக கமலின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இதையடுத்து கமல், வீட்டு மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் படப்பிடிப்பு தடைபட்டது. சிலகாலம்...
சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி. இந்தப் படத்துக்கு வந்த விமரிசனங்களைத் தொடர்ந்து இதன் திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்றுமுதல் திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
