Ad Widget

“காஷ்மோரா“ கதாபாத்திரத்தை ரொம்பவே ரசிச்சிப் பண்ணேன்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்த ‘காஷ்மோரா’ படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு நடைபெற்ற சக்சஸ் மீட்டில் படத்தின் இயக்குனர் கோகுல், கார்த்தி, படத்தை அங்கு வெளியிட்ட பிவிபி சினிமாஸ் பிரசாத் வி பொட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

kasmaroo-karththy

நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி தெலுங்கு திரைப்பட ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “இந்தப் படம் எங்களுடைய இரண்டு வருட உழைப்பு. படத்துல பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இந்த அளவிற்கு பெரிய பட்ஜெட் படத்தைப் பண்ணும் போது எங்களுக்கு ரொம்ப சந்தேகம் இருந்தது. எப்படிப் பண்ணப் போறோம்னு, ஒரு வருஷம் இதைப் பத்தியே பிளான் பண்ணோம். படத்தோட இயக்குனர் கோகுல் ரொம்பவே கஷ்டப்பட்டாரு. தமிழ்ல இப்படி ஒரு போர் காட்சிகள் இதுவரைக்கும் வந்ததில்லை.

‘காஷ்மோரா’ கதாபாத்திரத்தை ரொம்பவே ரசிச்சிப் பண்ணேன். இந்தப் படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் வில்லன் கதாபாத்திரம். தலை ஒரு பக்கம் இருக்கும், உடம்பு இன்னொரு பக்கம் இருக்கும். அப்புறம் தலையை எடுத்து உடம்போட சேர்த்துப் பேசணும். ஆங்கிலப் படத்துல பார்க்கிற மாதிரி ஆச்சரியப்பட வச்ச கதாபாத்திரம். சின்னப் பசங்களலாம் ரொம்வே ரசிக்கிறாங்க. ராஜ்நாயக் கதாபாத்திர ஷுட்டிங் நடக்கும் போது பார்த்தவங்க என்னைப் பார்த்து யாரு அது, பாம்பேல இருந்து வந்த ஹிந்தி நடிகரான்னுலாம் கேட்டாங்க. குழுவா நாங்க எல்லாரும் அதிகமான மகிழ்ச்சியில இருக்கோம்,” என்றார் கார்த்தி.

அதன் பின் பத்திரிகையாளர் ஒருவர் “வில்லனாக தொடர்ந்து நடிப்பீர்களா ?”, என்று கேட்டதற்கு கார்த்தி பதிலளித்தார். “என் படத்துல கூட முழு வில்லனாக நடிக்க எண்ணமில்லை. ஆனால், என் அண்ணன் சூர்யா நடிக்கிற படத்துல வில்லனா நடிக்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,” என்றார்.

ஆனால், அண்ணனை நாயகனாகவும், தம்பியை வில்லனாகவும் நடிக்க வைக்க எந்த இயக்குனருக்கு மனம் இருக்கும்.

Related Posts